பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

||--

அப்பாத்துரையம் - 23

வேண்டாம்.என்றோ தங்களை நாடி வந்திருப்பேன். ஆனால் என் தாயின் நகைகளை எப்படியும் பெறாமல் இதைவிட்டு ஒரு அங்குலம் கூடப் பெயரக்கூடாது என்றுதான் இத்தனை நாள் காத்திருந்தேன். இனியும் என்னால் காத்திருக்க முடியாது.

ஹேஸ்: என் அன்பே!

செ.நெ: என் உயிரே! (முத்தமிடுகிறாள்) அதிருக்கட்டும், ஹேஸ் டிங்ஸ்! இப்போது நாம் இன்னொரு நாடகத்துக்கு அடிபோட வேண்டும். என் தோழி கேட் இப்போதுதான் என்னோடு உலாவிவிட்டு அடுத்த அறையில் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். நான் என் இன்பத்தைச் சந்தித்துவிட்டேன். என்தோழி தன் காதலனைக் காண வேண்டாமா?

ஹேஸ்: ஐயோ, மார்லோ பெண்ணென்றால் நடுங்கு கிறவனாயிற்றே, நாணமும் வெட்கமுமே அவனைப் பிடுங்கித் தின்றுவிடும்.

செ.நெ: என் தோழியும் இதைத் தன் தந்தையிடமிருந்து கேள்விப் பட்டிருக்கிறாள். ஆனால் உங்கள் நண்பர் அவளுக்குப் பிடித்தமாயிருந்தால் போதுமாம். அவர் வெட்கத்தைத் தானே நேரில் மாற்றி அவரை ஏற்க எண்ணுகிறாள்.

ஹேஸ்: சரி, நாங்கள் ஏமாற்றப்பட்டதை உன்மூலம் நான் தெரிந்து கொண்டேன். ஆனால் நண்பனிடம் எப்படிச் சொல்லுவது? உண்மை தெரிந்தால் அவன் துணிவோடு தலையைத் தூக்கமுடியுமா?

செ.நெ: நடந்தது நடந்துவிட்டது. ஆனால் இப்போது உங்கள் நண்பரிடம் சென்று உண்மையைக் கூறினால், அவர் வெட்கத்தினால் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார். உங்கள் நண்பரிடம் உண்மையைச் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது.

ஹேஸ் ஆமாம். அதுதான் சரி. நான் நண்பனைக் கவனித்துக் கொள்ளுகிறேன். நீ செல்வி கேட்டை அழைத்து வா. அதோ நம் கோமாளி மாப்பிள்ளை வருகிறான். நெவில், விழிப்போடிரு. நம் நாடகம் வெளியாகி விடக் கூடாது.