பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

27

செ.நெ: அப்படியே, ஹேஸ்டிங்ஸ்! நான் வருகிறேன். (செல்வி நெவில் செல்கிறாள், மார்லோ வருகிறான்.)

ஹேஸ்: மார்லோ, உனக்கு ஒரு நல்ல சேதி. இப்போது ஒரு பெண் போனாளே பார்த்தாயா?

மார்லோ: ஆமாம், பார்த்தேன். ஏன்?

ஹேஸ்: அது யார் தெரியுமா? அவள் என் காதலி நெவில்! மார்லோ: அவள் இங்கே எப்படி வந்தாள்? ஹேஸ்டிங்ஸ்! உன் யோகமே யோகந்தான்.

ஹேஸ்: மார்லோ, யோகம் எனக்கு மட்டுமா? உனக்கும்தான். உன் காதலியும் என் நெவிலும் உறவினர்களாம். இருவருக்கும் நீண்டநாள் நட்பு உண்டாம். அவர்கள் வீடுகள் ஒன்றுக்கொன்று அருகிலிருப்பதால் இன்று மாலை உலாவ வந்தவர்கள் இந்த விடுதியில்தான் தங்கியிருக்கிறார்களாம். உன்னை உன் காதலியுடன் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று நெவில் போயிருக்கிறாள். கொஞ்சம் பொறு, வந்து விடுவார்கள்.

மார்லோ: ஐயையோ! நண்பா, ஏனிப்படித் திடீர் ஏற்பாடு செய்தாய். முதல் தடவை பார்ப்பதென்றால்...

ஹேஸ்: எப்படியும் முதல் தடவை பார்த்துத்தானே ஆக வேண்டும்.மேலும் விடுதியில் இருப்பதால் விடுதிக்காகப் பெண்களைப் பார்ப்பது மாதிரி...

மார்லோ: வேண்டாம் ஹேஸ்டிங்ஸ். விடுதிக்காரப் பெண்களென்றால் நம்மைப் போலப் பழகிக்கொள்வார்கள். நமக்கும் அதிகச் சிரமமில்லை. இந்த உயர்குடிப் பெண்கள் சட்டதிட்டம் வகுத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் கட்டுக்கோப்பும், நாகரிகப் பேச்சும் எனக்குச் சுத்தமாக ஒத்துவராது.

ஹேஸ்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ வந்துதான் ஆக வேண்டும். இதோ...அவர்களும் வந்துவிட்டார்கள்.

(செல்வி நெவிலுடன் செல்வி கேட் வருகிறாள். மார்லோ கண்களைப் பாதி மூடி நிலத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.அவன் கை கால்கள் நடுங்குகின்றன.)