பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அப்பாத்துரையம் - 23

செ.நெ: அன்புக்குரிய ஹேஸ்டிங்ஸ், இதோ என் தோழி செல்வி கேட்!

ஹேஸ்: (நெவிலையும் கேட்டையும் நோக்கி) நெவில் மிஸ் கேட், இதோ என் நண்பன் திரு. சார்லஸ் மார்லோவை உங்களுக்குப் பெருமையுடன் அறிமுகம் செய்து வைக்கிறேன். (மார்லோவை நோக்க) சார்லஸ், இதோ செல்வி கேட். (நாணத்தால் முகம் சிவக்க மயங்கி நிற்கும் மார்லோவிடம்) பேசுடா, காதலி முன்னால் இப்படியா மரம் போல நிற்பது? பேசுவதென்றே

மார்லோ: (மறைவாக) என்ன தெரியவில்லை; நாக்கு எழவில்லையே.

ஹேஸ்: (மறைவாக) உன் படிப்பையெல்லாம் கொட்டி உருட்டி... உம்...

மார்லோ: அம்... அம்மணி... நான்... நான்... நான்...

செல்வி கேட்: ஆம். அன்பரே! தங்களைக் காண நானும் மகிழ்ச்சியடைகிறேன்.

மார்லோ: (தனக்குள்) ஆகா, நான் பேசாததைப் பேசியதாகக் கொண்டு அதற்கு மறுமொழியும் பகர்ந்து விட்டாள் மாதரசி. இனியும் நான் பேசாதிருந்தால் என்னைப்பற்றி என்ன நினைப்பாள்? நான் ஏதாவது பேசித்தான் ஆகவேண்டும்.

செல்வி கேட்: (தொடர்ந்து) உங்கள் பிரயாணத்தில் பல தொல்லை கள் ஏற்பட்டதாக அறிந்தேன்.

ஹேஸ்: (மறைவாக) உம். பேசு.

மார்லோ: (தலை கவிழ்ந்தபடியே) அப்படி... அப்படி ஒன்றும்...உம்... என்னை மன்னிக்கவும்.

செல்வி கேட்: அப்படி ஒன்றும் இல்லை என்று கேட்க நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், நாகரிக சமூகத்தில் நன்கு பழகிய தங்களுக்கு இந்த நாட்டுப்புறம் அவ்வளவு பிடிக்காதோ என்றுதான் அஞ்சுகிறேன்.

மார்லோ: நாகரிக சமூகத்தில்... நாகரிக சமூகத்தில் நான் பழகியிருக்கிறேன். ஆனால்... அதில்... நான் (தாழ்ந்த குரலில்) என்னால் புரியும்படி சொல்ல.. மன்னிக்க வேண்டும்.