பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

29

செல்வி கேட்: புரிகிறது. நீங்கள் சொல்வது சரியே. நாகரிக சமூகத்தோடு பழகியதுண்டு; ஆனால் அதில் அழுந்திடவில்லை என்று கூறுகிறீர்கள், இல்லையா? ஆம். நாகரிகம் கண்டு இன்புறத் தக்கது. அதில் அழுந்திவிடக் கூடாது என்பது முற்றும் உண்மையே.

(செல்வி நெவிலும் ஹேஸ்டிங்ஸும் நழுவுகின்றனர்.)

மார்லோ: நான் நினைத்ததைச் சொல்லிவிட்டீர்கள்... நாகரிகம்... வெறும் வெளிப்பகட்டு, அதில் பெண்கள்... எனக்குப் பேசத் தெரியவில்லை. மன்னிக்க வேண்டும்.

செல்வி கேட்: மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை. தங்கள் பேச்சு எனக்கு ரொம்பவும் பிடித்தமாயிருக்கிறது. பெண்கள் நாகரிகத்தின் வெளிப்பாட்டைக் கண்டு மயங்கி விடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் எல்லாப் பெண்களும் அப்படியல்ல. வெளிவேஷத்தைக் கண்டு மயங்காமல், உள்ளழகைக் கண்டு மகிழ்பவர்களும் உண்டு.

மார்லோ: அதுதான் நானும் சொல்ல வந்தேன்...ஆனால் பெண்களுக்கேற்றபடி... பேச.. நடிக்க என்னால் முடியவில்லை... நான்... நான்... என் நண்பன்... (திரும்பிப் பார்த்து நண்பனைக் காணாமல்) ஹேஸ்டிங்ஸ் போய்விட்டான். உங்களை இன்னும் தொல்லைப்படுத்த நான் விரும்பவில்லை. ஹேஸ்டிங்ஸைப் பார்த்து வருகிறேன்... நீங்கள், வருகிறீர்களா?

செல்வி கேட்: ஆம், நானும் உங்களுடனேயே வருகிறேன். (தனக்குள்) அந்தோ, புத்தகப் பூச்சியாய் இருந்திருக்கிறார். பெண்களுடன் எப்படிப் பழகுவதென்றே தெரியவில்லை. அது ஒன்றுதான் குறை. அதையும் நான் விரைவில் போக்கி விடுகிறேன். (செல்கின்றனர்)

களம் 2

(திரு.ஹார்ட்காசில் மனை. டானியும், செல்வி நெவிலும் வருகின்றனர். பின்னால் திருமதி கேட்காசிலும் ஹேஸ்டிங்ஸும் வருகின்றனர். நேரம்: மாலை)