பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அப்பாத்துரையம் - 23

டானி: ஏன் இப்படி என் மடியைப் பிடித்துக் கொண்டு, விடேன் தொடேனேன்று பின்பற்றிக் கொண்டு வருகிறாய். ஒரு ஆடவனைப் பின் தொடர உனக்கு வெட்கமாயில்லை!

செ.நெ: டானி, நீ என் மைத்துனன்தானே! உறவினருடன் பேசுவது தவறாகுமா? (தணிந்த குரலில்) அம்மா பின்னால் வருகிறாள். இப்போது சிறிது நட்பாகத்தான் நடிக்க வேண்டும். (உரத்த குரலில்) நாம் இந்தச் சோலைக்குள் செல்வோமா? டானி: ஆகா, அதற்கென்ன, வா, செல்வோம். (இருவரும் போகின்றனர்.)

திருமதி ஹா: அதோ போகின்றன, என் குஞ்சுகள், என்னிடம் கூட இதுகளுக்கு எத்தனை ஒளிவுமறைவு! எத்தனை

கபடம்!

ஹேஸ்: அம்மணி, அந்த இளைஞன் உங்கள் தம்பியா யிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

திருமதி. ஹா: (முகமலர்ச்சியுடன்) இல்லை, அன்பரே அவன் என் தங்கை மகன். எனக்கு அவர்களைச் சேர்த்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவல், இந்த வயதில்...

ஹேஸ்: தங்களுக்கென்ன அப்படி வயதாகிவிட்டது?

திருமதி ஹா: நாற்பது, நாற்பத்திரண்டு ஒரு வயதில்லை தான்! ஆனால் நீங்கள் லண்டன் நகர நாகரிகமறிந்தவர்கள். நானோ நாட்டுப் புறத்தில் இருந்து கொண்டு அதைப்பற்றிக் கனவு கண்டுகொண்டிருப்பவள்.

ஹேஸ்: இதை நான் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது. உங்களைப் பார்க்கும் போது, நேற்றுவரை லண்டனில் பார்த்த மாதரில் ஒருவரைப் பார்ப்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது.

திருமதி ஹா: (முகமெங்கும் மகிழ்ச்சி பொங்க) நீங்கள் முகப்புகழ்ச்சி செய்கிறீர்கள் உங்கள் வாய்க்குச் சர்க்கரை இடவேண்டும். அது கிடக் கட்டும்...! அதோ என் டானி வருகிறான்.

(பாடிக்கொண்டேடானி வருகிறான்.)