பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

டானி: ராரா ராரா ராராரா (ராரா)

31

திருமதி ஹா: வாடா, டானி உன் பெட்டைக் கோழியை

எங்கே விட்டாய்?

டானி: (பாடுகிறான்)

ராரா ராரா ராராரா (ராரா)

குதிரைஏறிக் காளை ஒருவன்- மனங்

கொண்ட கன்னி கொண்டுமென்றே

(ராரா)

மதுரை நோக்கிப் பறந்துவிட்டான்- மங்கை

மாளிகைதன்னை அடைந்துவிட்டாள்!

(ராரா)

திருமதி ஹா: ஏண்டா டானி, இம்மாதிரிப் பாட்டுப் பாடி அந்த அப்பாவி நெவிலை ஏமாற்றிவிட்டு, என்னிடம் அவளை வெறுப்பதாய்ப் பாசாங்கு செய்கிறாயாக்கும்.

டானி: அம்மா, உன் மூளை பொல்லாத மூளை. அது நேராக ஓடவே ஓடாது; வளைந்து வளைந்துதான் ஓடும்.

திருமதி ஹா: இந்த மாதிரி நன்றிகெட்ட பிள்ளையை வேறு எங்காவது பார்த்திருக்கிறீர்களா? அன்பரே, இவன்...

L டானி: அம்மா, போதும். இந்தப் பட்டணத்து அப்பாவியிடம் உன் சொற்பொழிவு வேண்டாம்.நான் அவனிடம் கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது. நீ போய் உன் மருமகனிடம் உறுமிக்கொண்டிரு.

திருமதி ஹா: (ஹேஸ்டிங்ஸை நோக்கி) உங்களை மீண்டும் காண்கிறேன். அன்பரே, போகுமுன் எப்படியும் எனக்கு லண்டன்நகர் ஆடை அணி நாகரிகங்களைப் பற்றி நன்றாகச் சொல்ல வேண்டும். இப்போது போய் வருகிறேன்.

(போகிறாள்)

ஹேஸ்: (மறைவாக) லண்டன் பைத்தியமே, போய் வா, (வெளிப்பட) ஐயா, வழிகாட்டியாரே, எங்களைத் தப்பு வழிகாட்டி ஏய்த்தது சரியா? அதனால் எத்தனை அவதிகள் தெரியுமா?

டானி: பட்டணத்துப் பட்டிக்காட்டான்களே இப்படித் தான். நான் தப்புவழி காட்டினேன். தப்புவழியில் வந்ததாக