பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம் - 23

நீர்தானே முதலில் சொன்னீர். நான் வேண்டுமென்று செய்தால் உம்மைச் சுற்றிச் சுற்றியடித் திருக்கப்படாதா? அப்படியும் நீர் எதிர்பாராமலே சேரவேண்டிய இடத்தில் சேர்த்தேனா

ல்லையா? மேலும் உன் நண்பனின் காதலி என் தங்கை. மைத்துனன் கைவரிசைகளை அவர் தொடக்கத்திலேயே அறிந்து கொள்ள வேண்டாமா?

ஹேஸ்: (தனக்குள்) இந்தக் கோமாளியுடன் வழக்காடி வெல்ல முடியாது. ஆதரித்துப் பேசியே காரியத்தைச் சாதிக்க வேண்டும். (வெளிப்பட) எங்களைத்தான் இப்படி அலைக்கழிக்கிறாய், போகட்டும்; உன் சிற்றன்னையை ஏன் இப்படிப் பாடாய்ப்படுத்த வேண்டும்?

டானி: அவள் என்னைப் படுத்தும் பாடு உங்களுக்கென்ன தெரியும்? என்னென்ன காட்டுமிராண்டிப் புத்தகங்களெல்லாம் அவள் அப்பன் அவளுக்குக் கொடுத்தானோ, அதையெல்லாம் என் தலையை உடைத்துப் புகுத்தப் பார்க்கிறாள். அது போதாதென்று அந்தச் சீனத்துப் பொம்மையிருக்கே, என் மச்சி- அதான் நெவில்- அதைக் காசுக்காகக் கட்டிக்கொண்டு சாகவேண்டுமாம்!

ஹேஸ்: அந்தச் சீனப் பதுமையை என்னதான் செய்ய விரும்புகிறாய்?

டானி: எந்த முட்டாளாவது அதைப் பார்த்து ஏமாந்து, இழுத்துக் கொண்டு போய்விட மாட்டானா என்று தான் தவியாய்த் தவிக்கிறேன்.

ஹேஸ்: டானி, அந்தக் கவலை உனக்கு வேண்டாம். நீ மட்டும் எனக்கு உதவி செய். நானே அதை இழுத்துக் கொண்டு போய்விடுகிறேன்.

டானி: இதற்காக நான் எந்த உதவியும் செய்யத் தயார்.

(போகின்றனர்.)