பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

மூன்றாம் காட்சி

களம் 1

(கேட்காசில் மாளிகை; திரு. கார்ட் காசில் சிந்தனையில் வாழ்ந்திருக் கிறார். செல்வி கேட்காசில் எளிய சாதாரண உடையணிந்து வருகிறாள். நேரம்: மாலை)

33

வாம்மா,கேட்! உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். நான் கூறியபடியே எளிய உடையில்தான் வந்திருக்கிறான்.நன்று. ஆனால் இப்போது நான் நினைக்கிறேன். உன்னை நான் அவ்வளவு கட்டுப் படுத்தியிருக்க வேண்டியதில்லையென்று.

செல்வி கேட்: ஏனப்பா அப்படி?

திரு ஹா: பேர்வழி அடக்க ஒடுக்கமாயிருப்பான். பெரியோர் முன்னிலையில் பயந்து பழகுவான், அப்படி இப்படி என்று நீ ான்னதை நம்பி, நீ பகட்டாடை உடுத்துவது தவறு என்று நினைத்தேன். ஆனால் நேரில் பார்த்தால் அவர்கள் மானம், மரியாதை தெரியாத துணிச்சல் பேர் வழிகளா யிருக்கிறார்கள்.

செல்வி கேட்: நீங்கள் சொல்வது எனக்கொன்றும் விளங்கவில்லை. நான் பார்த்தமட்டில் அவர்... பன்மடங்கு நாணமுள்ளவராகத்தான் காணப்படுகிறார்.

திரு.ஹா: செல்வி, நீ அறியாது கூறுகிறாய். நீ குறிப்பிடும் 'அவர்' கொஞ்சங்கூட ரோஷஉணர்ச்சி இல்லாதவர்.

செல்வி கேட்: அப்பா, நான் அறிந்துதான் கூறுகிறேன். அவர் மிகவும் நாணமுடையவர்.

திரு ஹா: நம் இருவரில் ஒருவர் கூறுவது எப்படியும் தவறாகத் தானிருக்க வேண்டும். ஆனால் நான் கூறுகிறபடி யிருந்தால், நீ அவரை மணந்துகொள்ள நான் இணங்க மாட்டேன்.

செல்வி கேட்: நான் கூறுகிறபடியிருந்தால், நான் அவரைக் கட்டாயம் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் ஒருவேளை நாம் இருவர் கூறுவதும் சரியாகவும், அல்லது இருவர் கருதுவதும் தவறாகவும் இருக்கலாம். அப்போது இருவருக்குமே அவர் பிடித்தமானவராயிருக்கவும் கூடும்!