பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 23

திரு. ஹா: யார் சொல்வது சரியென்பதைப் பொறுத்துப் பார்ப்போம்.

(இருவரும் செல்கின்றனர். டானி வருகிறான்)

டானி: (தனக்குள் கையிலுள்ள நகைப் பெட்டியைக் குலுக்கிப் பார்த்து) நிறைய பொன் அணிமணிகள் இவற்றை அந்த ஹேஸ்டிங்ஸிடம் கொடுத்துவிட்டால், நெவில் இன்றே மகிழ்ச்சியோடு அவனுடன் ஓடிப்போய் விடுவாள். இதோ அவனும் வருகிறான்.

L

(ஹேஸ்டிங்ஸ் வருகிறான்.)

ஹேஸ்: டானி, நாங்கள் இன்றிரவே போக ஏற்பாடுகள் செய்து விட்டாயா?

டானி: டானியிடம் சொல்லிவிட்டால் போதும். செய்து விட்டாயா என்று கேட்கவேண்டியதேயில்லை. வண்டியும் குதிரையும் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த L டானியே வண்டியைச் செலுத்தி உங்களைத் தொலைவில் கொண்டு வந்து விடுவான். அதோடு என் ஏற்பாடு முடிந்து விடவில்லை. அந்த நெவிலின் நகைப் பெட்டியையும் கொண்டு வந்து விட்டேன். இதையும் அவனைக் கொண்டு போகவிருக்கும் உன்னிடமே தந்துவிடுகிறேன்.

ஹேஸ்: இதை எப்படித் தம்பி எடுத்தாய்? அப்புறம். சின்னம்மா தேடுவார்களே?

டானி: அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த மச்சி நெவில் மட்டும் தொலைந்துவிட்டால் போதும், நான் சின்னம்மா கோபத்தைச் சுலபமாக சமாளித்துக் கொள்வேன்.

ஹேஸ்: அது சரி, டானி. நீ இதை எடுப்பது தெரியாமல் நெவில் தன் அத்தையிடம் கேட்கப் போயிருக்கிறாளே?

டானி: அட பைத்தியமே! பார்த்தாயா! அவள் நகைப் பைத்தியந்தான் எனக்குத் தெரியுமே, சரி, முன்னே போய்க் காத்திரு. நான் அவளை நயமாகப் பேசி அனுப்பி வைக்கிறேன். (ஹேஸ்டிங்ஸ் போகிறான், தனக்குள்) இந்த டானிக்கு உள்ள மூளையில் பத்தில் ஒரு பங்காவது அதுகளில் எதற்காவது இருந்தால்தானே! முட்டாள்கள்!