பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

(திருமதி ஹார்ட்காசிலும் நெவிலும் வருகின்றனர்.)

35

திருமதி ஹா: உனக்கென்ன இப்போது அவசரம் வந்துவிட்டது. நீ என் செல்வன் டானியை மணஞ் செய்து கொள்ளும் போது...

செல்வி. நெ: இப்போது நான் சற்றுப் போட்டுப் பார்த்துவிட்டுத் தருகிறேன்.

டானி: (மறைவாக) சும்மா இப்படி வா! (தனியே அழைத்துச் சென்று) தொலைந்துவிட்டது என்று கூறிவிடேன்.

திருமதி.ஹா: சொன்னால் நம்புவாளா?

L டானி: அது தொலைந்தது என்பதற்கு நானே சான்று கூறுகிறேன்.

திருமதி. ஹா: (நெவிலியிடம் சென்று அவளை நோக்கி) நெவில், இப்போது நான் என்ன செய்வதென்றே தோன்றவில்லை. உன் நகைப்பெட்டி காணாமற் போய்விட்டதே.

செ.நெ: அம்மா, நீங்கள் இட்டுக் கட்டிச் சொல்லுகிறீர்கள். நான் அதை நம்பமாட்டேன்.

திருமதி ஹா: நான் சொல்வதில் நம்பிக்கையில்லையா? இதேடானியைக் கேள்.

டானி: ஆமாம், நகைப்பெட்டி இல்லையென்பதை நானே நேரில் கண்டேன். (நெவில் விழித்துப் பார்க்கிறாள். திருமதி. ஹார்ட்காசில் திடுக்கிட்டுச் சென்று பார்க்கப் போகிறாள். நெவிலை நோக்கி) அட பைத்தியமே! நகை ஹேஸ்டிங்ஸிடம் போய்விட்டது. அம்மா அதைப் பார்க்கப் போய்விட்டாள். நீ ஹேஸ்டிங்ஸிடம் ஓடிப் போய் விடு; போ, விரைந்து செல்.

(நெவில் செல்கிறாள். திருமதி. ஹார்ட்காசில் அங்கலாய்த்துக் கொண்டு வருகிறாள்.)

திருமதி ஹா: (கையைப் பிசைந்துகொண்டே) ஐயையோ, ஐயையோ! நகை காணாமற் போய்விட்டதே.டானி. நான் என்ன செய்வேன்.

டானி: ஆமம்மா! நானும் பார்த்தேனே!