பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

திருமதி ஹா: என்னடா பார்த்தாய்?

அப்பாத்துரையம் - 23

டானி:காணாமற் போனதை அம்மா! நீதான் அப்போதே

சொன்னாயே!

திருமதி ஹா: விளையாட்டுக்கல்லவா சொன்னேன்; இப்போது உண்மையிலேயே காணாமற் போய்விட்டது, டானி.

L டானி: அம்மா உங்கள் நடிப்பு அபாரம். தத்ரூபமா யிருக்கிறது.

திருமதி. ஹா: நடிப்பா...? ஓகோ, இவ்வளவும் உன் வேலைதானா? நன்றி கெட்ட பயலே, உன்னை என்ன செய்கிறேன் பார்.(அடிக்க ஓங்குகிறாள்.டானி ஓடிவிடுகிறான், தனக்குள்) நன்றி கெட்ட பயல், இவனுக்கு இப்பொழுது என்ன கேடு? தங்கமான பெண்ணை தங்கத்தோடு அவனிடம் சேர்க்க நினைத்தால்... (போகிறாள்.)

களம் 2

(ஹார்டுகாசில் மாளிகை: செல்வி கேட்டும், பணிப்பெண்ணும், நேரம் முன்னிரவு.)

பணிப்பெண்: அம்மா கேட்டீர்களா? நான் இப்போது வரும்போது உங்கள் காதலர் யாருடி என்றார். நான் வேலையாள் என்றேன். அவர்... அவர்...

செல்வி ஹா: என்னடி, சொல்லேன்.

பணிப்பெண்: அவர் உங்களைச் சுட்டிக்காட்டி அதுவும் விடுதிப் பெண்தானே என்றார்.

(குலுங்கச் சிரிக்கிறாள் தோழி)

செல்வி கேட்: (தானும் சிரித்து) அப்படியா, அவரை நான் முதன் முதல் பார்த்தபோது அவர் என்னை ஏறிட்டுப் பார்க்கவேயில்லை. சரி, அப்படியானால் ஒன்று செய்வோம். நான் விடுதிப் பெண்ணாகவே நடித்து, அவர் போக்கு எப்படியிருக்கிற தென்று பார்க்கிறேன். இதோ, இப்பக்கம் தான் அவரும் வருகிறார்.