பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

37

(பணிப்பெண் போகிறாள். மார்லோ தன்னை மறந்து உள்ளே நுழைகிறான்.)

மார்லோ: (தனித்திருப்பதாக எண்ணி) இந்தச் செல்வி கேட் ஹார்டு காசிலோடு நாம் வாழ முடியாது.

செல்வி கேட்: (திடுக்கிட்டு, தனக்குள்) ஓகோ, அப்படியா! பார்க்கிறேன் ஒரு கை! (வெளிப்பட) ஐயா, ஐயா! நீங்க கூப்பிட்டிங்களா ஐயா!

மார்லோ: நான் கூப்பிடவில்லையே... (உற்றுப் பார்த்த வண்ணம் தனக்குள்) ஆ, என்ன அழகு! எந்த விடுதியிலும் இவ்வளவு மிடுக்கும் துடுக்கும் உள்ள அழகிகளை நான் பார்த்ததில்லை. (உரத்து) ஆம், ஆம். கூப்பிட்டேன். கொஞ்சம்... கொஞ்சம் (தயக்கம்)

செல்வி கேட்: கொஞ்சம் என்ன வேண்டும்.

மார்லோ:என்ன வேண்டும் என்பதையே மறந்து விட்டேன், உன்னை- உன் அழகைக்- கண்டபிறகு.

செல்வி கேட்: இப்படியெல்லாம் பேசினால், பெண்கள் உங்கள் பக்கம் வரவும் வெட்கப்படுவார்கள். நான் வருகிறேன் (போக முயல்கிறாள்)

மார்லோ: இதோ, இதோ நினைவுக்கு வந்துவிட்டது. இங்கே... ஊம்... உங்களிடம் இது... இது... இருக்கிறதா?

செல்வி கேட்: பெயரில்லாத பொருள் எதுவும் இங்கே எங்களிடம் கிடையாது.

மார்லோ: கேட்பது எதுவும் இந்த இடத்தில் இராது போலும்! ஆனால் தான் இருப்பதையே கேட்கிறேன். உன்... உன்... இதழமுதம்... சிறிது...

செல்வி கேட்: (தெரியாத பாவனையில்) ஐயா, அப்படி ஒரு சரக்கின் பெயர் நான் கேட்டதில்லை... அது ஏதோ நீங்கள் பட்டணத்தில் பெறும் புது ஃபிரெஞ்சுச் சரக்குப் போலிருக்கிறது.

மார்லோ: நான் கேட்பது பிரிட்டிஷ் சரக்கைத்தான்.

செல்வி கேட்: சென்ற பதினெட்டு ஆண்டுகளில் நான் கேள்விப் பட்ட மது வகைகளில் இப்படி யாரும் கேட்டதில்லை.