பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் - 23

மார்லோ: சென்ற பதினெட்டு ஆண்டுகளா? அப்படி யானால் உன் வயது என்ன?

செல்வி கேட்: நல்ல பெண்ணுக்கும் நல்ல இசைக்கும் வயது கிடையாது என்பார்கள். இரண்டும் காண்பவர், கேட்பவர் தூரத்தைப் பொறுத்தவை என்று சொல்லலாம்.

மார்லோ: ஓகோ, அப்படியா, சரிதான். இங்கே இவ்வளவு தூரத்தில் நின்று நோக்கும் போது நாற்பது போல் தோன்றுகிறது (அணுகிவந்து) இப்போதுதான் நன்றாகத் தெரிகிறது முப்பதுக்கும் குறைந்ததென்று (பின்னும் வந்து) ஆகா, என்ன எடுப்பான கட்டிளம்பாவை! கண்ணே, நான் கேட்டதை எடுத்துக் கொள்கிறேன். (கையைப்பற்றி இதழோடு இதழ் இணைக்க முயலுகிறான்.)

று

செல்வி கேட்: (பின்னால் விலகி) நீங்கள் தொலைவிலிருந்து பார்த்தால் போதும். பெண்களென்ன மாடா, குதிரையா- பல்லைப்பிடித்து வயது பார்க்க, (குறும்பு நகை தவழ) சற்றுமுன் செல்வி கேட்காசில் இங்கே வந்திருந்தார்களே, அவளை நீங்கள் இப்படியெல்லாம் பார்க்கவில்லையே. இங்கே துணிச்சல், அவளைக் கண்டால் அச்சம்!

மார்லோ: (தனக்குள்) ஆகா, என்ன சாதுரியமான கிண்டல். (வெளிப்பட) அவளைக் கண்டால் அச்சமா? பெண்களைக் கண்டு யாராவது அஞ்சுவார்களா? ஆனால் குறுகுறுத்த பார்வையும் வெட்டிப்பேசி அழைக்கும் இளமை அழகுமுள்ள நீ எங்கே? அந்த மாறுகண் மண்பொம்மை எங்கே?

செல்வி கேட்: (தனக்குள்) என் காலடியைக் கூடப் பார்க்கவில்லை. கண் மாறு கண்ணாம். ஆம் இப்போது மாறுகண்ணுடன் தான் பார்க்க வைத்திருக்கிறேன். (வெளிப்பட) ஐயா! தாங்கள் பெண்களுடன் மிகவும் பழகியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

மார்லோ: எல்லாம் உன்னைப் போன்ற அழகிகள் நட்பால் தான்.உண்மையில் லண்டன் நகரத்திலுள்ள பல கலைக்கழகங்கள் எனக்கு அறிமுகம். அங்கே திருமதி மந்திராப், திருமதி ஸிகோ கோமாட்டி, பெருமாட்டி பிளாஸ்ஸிங் முதலிய நாகரிகப் பெண்மணிகளின் நட்புக்குரியவன் நான். அவர்கள் என்னைக்