பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

39

கேலியாக 'வெண்கல முரசு' என்பார்கள். ஆயினும் என் பெயர்

சாலமான்.

செல்வி கேட்: அங்கே கலைக்கழகங்களெல்லாம் நல்ல பாழுது போக்குவதற்குரிய களியாட்டக் கூடங்களாகத்தான் இருக்குமென்று நான் எண்ணுகிறேன். அங்கே பெண்கள் வேலை எதுவுமே செய்ய மாட்டார்களோ?

மார்லோ: ஏன் செய்ய மாட்டார்கள். அழகுக்கு அழகு செய்யும் பூ வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். நீ கூட நன்கு பூ வேலை செய்வாய் போலிருக்கிறதே. உன் ருக்கிறதே. உன் கையுறையில் சொருகியிருக்கிறதே கைக்குட்டை, அதில் காணப்படும் பூ வேலைகள் எல்லாம் உன் கைவேலை தானா?

செல்வி கேட்: ஆம் இதோ பாருங்கள்.

மார்லோ: (கையைப்பற்றி) ஆகா, அருமையான வேலை. இது ஆயிரம் முத்தம் பெறும் (கைக்கு முத்தம் கொடுக்கிறான்) செல்வி கேட் : போதும், போதும், யாராவது வந்து

விட்டால்...

மார்லோ: அப்படியானால் யாரும் வருமுன்பே... (இழுத்தணைத்து முத்தம் கொடுக்கிறான்)

(திரு ஹார்காசில் நுழைந்து வியப்புடன் ‘ஆ’வெனக் கூவுகிறார். மார்லோ மறைந்து விடுகிறான்)

திரு ஹா: வேலிக்கு ஓணான் சான்று கூறியது போல் நீ அவன் நாணத்துக்குச் சான்று கூறியது எதற்காக என்பது இப்போதுதான் விளங்குகிறது.

செல்வி கேட்: அப்பா, அவரைக் குறை கூறத் தொடங்கி இப்போது என் மீது பாய்கிறீர்கள். அவர் நாணமுடையவர் என்று தான் இப்போதும் நான் நினைக்கிறேன். அவரைத் தூண்டித் துணிச்சலை உண்டு பண்ணியது நான்தான். எல்லாம் நீங்கள் விரைவில் அறிவீர்கள்.

(போகிறாள்)

திரு.ஹா: (தனக்குள்) இப்போது அதுகள் துணிச்சல் இவளுக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது. எல்லாம் காலத்தின்