பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 23

கோளாறு. மார்ல்பரோக் கோமகன் காலத்துப் பெருமை யெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இந்த லண்டன் மாநகரம் பிரிட்டனின் பழம் பெருமைகளைக் கெடுக்கிறது. நாட்டுப் புறக் குடும்ப வாழ்க்கை கூட அலைக்கழிவுறத் தொடங்கிவிட்டது.

(போகிறார்)

நான்காம் காட்சி

களம் 1

(திரு. ஹார்ட்காசில் மாளிகை. ஹேஸ்டிங்ஸும் செல்வி நெவிலும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். நேரம்: மாலை.)

ஹேஸ் திருத்தகை

சார்ல்ஸ் மார்லோ இன்று வருகிறாரென்று உனக்கெப்படித் தெரியும்?

செ.நெ: அவரே இரண்டாவதாக எழுதிய கடிதத்தில் குறிப் பிட்டிருக்கிறார்.

ஹேஸ்: அவருக்கு என் செய்திகளெல்லாம் தெரியும். ஆகவே அவர் வருவதற்குள் நாம் விரைந்து சென்று விடவேண்டும்.

செ.நெ: சரி, நகைகளையெல்லாம் பத்திரப்படுத்தி விட்டீர்களா?

ஹேஸ்: ஆம். அவை மார்லோவிடமே பத்திரமாக இருக்கின்றன. டானி வண்டி குதிரையுடன் வந்து ஏற்றியனுப்புவ தாகக் கூறியிருக்கிறான். நான் சென்று அவனைத் துரிதப்படுத்து கிறேன். நீ முன்னேற்பாட்டுடன் எனக்காகப் போய்க் காத்திரு.

(போகிறாள். மார்லோ வருகிறான்)

ஹேஸ்: வா மார்லோ, சரி, என்ன சேதி? நான் அனுப்பிய பேழையைப் பத்திரப்படுத்திவிட்டாயா?

மார்லோ: நீ எதிர்பார்ப்பதைவிட மிகமிகப்பத்திரமான இடத்திற்கே அனுப்பிவைத்திருக்கிறேன். இத்தனை விலையுயர்ந்த பொருளைப் பெட்டியில் வைப்பது சரியா? ஆகவே நமது விடுதித் தலைவியிடமே அதை அனுப்பிவிட்டேன்.