பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

41

ஹேஸ்: (தனக்குள்) திருமதி ஹார்ட்காசிலிடமிருந்து டானி அரும்பாடுபட்டுக் கொண்டு வந்த நகைப் பெட்டியை இந்தக் கோமாளி திரும்பவும் அவளிடமே கொடுத்து விட்டான். ஆனால் கோபப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை. தற்சமயம் அவள் நகையில்லாது வந்தாலென்ன, குடியா முழுகிப் போய்விடும். (வெளிப்பட) சரி, ஏது இத்தனை குஷி?

மார்லோ: என் வாழ்விலும் காதல் இடம் பெற்று விட்டது! ஹேஸ்: என்ன, மீண்டும் செல்வி ஹார்ட்காசில்.. மார்லோ: அந்த வரிந்து சுற்றிய துணிப் பொம்மையா? சொல்லவில்லை நான். இங்கே இடுப்பில் சாவிக்கொத்துடன் வருவாளே, ஒரு நல்ல துடுக்குக்காரப் பெண்..

அவளைச்

ஹேஸ்: இருந்திருந்து..

மார்லோ: என் காதலி ஒரு விடுதிப் பெண்ணாகவேதான் இருக் கட்டுமே. ஆனால் அவள் அழகு, ஆகா! என்ன கரிய பெரிய விழிகள்! எத்தனை குறுகுறுப்பு!

ஹேஸ்: போதும், அந்த அழகிக்காக நீ காத்திரு. நான் விரைவில் வருகிறேன்.

(செல்கிறான்)

(செல்விகேட் அப்பக்கமாகச் செல்கிறாள்.)

(வெளிப்பட) என் அன்பரசி, ஏன் இத்தனை வேகம். சற்று நில். உன்னிடம் ஒரு செய்தி கேட்க வேண்டும்.

செல்வி கேட்: கேட்பதை விரைவில் கேளுங்கள். நேரமாகிறது.நான் போகவேண்டும்.

மார்லோ: வேறொன்றுமில்லை, ஒரே ஒரு விளக்கம் வேண்டும்.நீ யார்? இங்கே என்ன வேலை உனக்கு?

செல்வி கேட்: (தனக்குள்) சிறிது சிறிதாகத்தான் விளக்க வேண்டும். அப்போதுதான் ஆளின் இயல்பை நன்றாக அறிந்து கொள்ள முடியும். (வெளிப்பட) நான் இங்கே வேலை செய்பவள்தான். ஆனால் வேலைக்காரியல்ல. இந்த வீட்டுப் பெருமாட்டிக்குத் தூர உறவு.