பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42 --

அப்பாத்துரையம் - 23

மார்லோ: இந்த வீட்டுப் பெருமாட்டிக்கா? எந்த வீட்டுப் பெருமாட்டி?

செல்வி கேட்: வேறு எந்த வீட்டுப் பெருமாட்டி இங்கே இருக்க முடியும்? திருமதி ஹார்ட்காசில்தான் இந்த வீட்டுக்குரிய பெருமாட்டி

மார்லோ: ஐயோ, இது ஹார்ட் காசில் குடும்ப மாளிகையா? விடுதியல்லவா?

செல்வி கேட்: (குலுங்க நகைத்து) என்ன, விடுதியா? யாரையா அப்படிச் சொன்னது? இதைப் பார்த்தால் விடுதியைப் போலல்லவா இருக்கிறது உங்களுக்கு?

மார்லோ: அந்தோ, யாரோ சரியாக ஏமாற்றிவிட்டார்கள். இது தெரியாமல் நான் முட்டாள்தனமாக அல்லவா நடந்து கொண்டு போய் விட்டேன்! ஏமாந்து நான் எத்தனை முறை திரு ஹார்ட்காசில் முன்னிலையில் மடத்தனங்கள் செய்துவிட்டேன்! இனி அவர் முகத்தில் எப்படி விழிப்பது..? ஆம் இன்றிரவே ஒருவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குப் புறப்பட வேண்டியதுதான்!

செல்வி கேட்: ஊருக்கா? ஏன் போக வேண்டும்? உங்களுக்கு யாராவது தீங்கு செய்தார்களா?

மார்லோ: ஒருவரும் ஒரு கெடுதலும் செய்யவில்லை. நான்தான் கோமாளித்தனமாக நடந்துவிட்டேன். உன்னைக் கூட ஒரு விடுதிக்காரப் பெண் என்று கருதித்தான் தவறாக நடத்திவிட்டேன்.

செல்வி கேட்: ஐயா, நீங்கள் சொல்வதைக் கேட்க எனக்குத் திகிலாயிருக்கிறது. என்னை ஒரு விடுதிக்காரப் பெண் என்று நி னைக்கும்படி நான் ஏதாவது தப்பிதமாய் நடந்து

கொண்டேனா? சொல்லுங்கள்.

மார்லோ: நீ ஒன்றும் அப்படி நடந்து கொள்ளவில்லை. நான் உன் கள்ளங் கபடமற்ற நடத்தையை உணர முடியாமல், உணர்ச்சி வசப்பட்டு உன்னை மதியாமல் நடந்து கொண்டேன்.

செல்வி கேட்: ஐயா, நீங்கள் என்னை எவ்வளவோ மதிப்பாகத்தான் நடத்தினீர்கள். எவ்வளவோ

னிய