பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

43

மொழிகளைப் பேசினீர்கள். ஆனால் இப்போது நீங்கள் மனம் வெறுத்துப் பேசும்படியாக நான் என்ன செய்து விட்டேன் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. என்மீது... என்மீது வெறுப்புக் கொண்டு (தேம்பித் தேம்பி அழுது கொண்டே நீங்கள் இப்போது போய்விட்டால் என் நிலை என்னவாகும்?

மார்லோ: (தனக்குள்) ஆ, இவள் உள்ளக் கனிவு என்னை உருக்குகிறது. இவள் கள்ளங் கபடமற்ற தன்மை, கனிவுறுங் கருணைமொழி கவருகிறது என்னை. (வெளிப்பட) அன்பே, என்னை மன்னிப்பாய். நான் இவ்வீட்டை விட்டுப் போய்த் தீரவேண்டும். ஆனால் காரணம் நீயல்ல, நான் உன்னை வெறுக்கவுமில்லை. மாறாக முன்னிலும் பன் மடங்கு என் விருப்பம் பெருகியிருக்கிறது. என் அகத்திலே அன்பு மலர்ந்திருக்கிறது. உண்மையில் இந்த வீட்டை விட்டுப் போகும்போது என் நிறைவில் என்றென்றும் நின்று நிலவுந் தகுதிபெற்ற பொருள் ஒன்று உண்டென்றால் அது நீதான் கண்ணே!

செல்வி கேட்: (மகிழ்வுடன்) உண்மையாகவா?

மார்லோ: ஆம். உண்மைதான். ஆனால் மாதரழகில் ஈடுபட்டு அந்த அழகுக்காகப் பெண்களைத் தண்டித்து, அழிக்க

என்

மனம் விரும்பவில்லை. பிறப்பு, கல்வி, செல்வம் ஆகியவற்றால் வேறுபாடு காணுமிடங்களில் நேரிடையாகத் தொடர்பு கொள்வதற்கு சமூகமதிப்பும், பெற்றோராணையும் இருபெருந் தடைக் கற்கள் என்பது உனக்குத் தெரியாதா? அவற்றை மீறிச் செயலாற்றும் ஆற்றலும் தற்போது என்னிடம் இல்லை.

செல்வி கேட்: (தனக்குள்) இவர் உள்ளக்கனிவு, பெருந்தன்மை, நேர்மை ஆகிய யாவும் என் நெஞ்சில் நிறைந்து விட்டன. இவர் தகுதியில் ஒரு பகுதியைக்கூட என் கனவுகள் எட்டியதில்லை. (வெளிப்பட) அன்பரே, குடும்பத்திலும், கல்வியிலும் நான் செல்வி ஹார்ட்காசிலுக்கு இளைத்தவளல்ல. ஆனால் நான் ஏழை. என் ஏழ்மை இது வரை எனக்கு ஒரு குறையாகத் தோன்றவில்லை. இன்றுதான் அதுவும் ஒரு குறையாகத் தோன்றுகிறது. ஆனால் என்னளவில், எனக்கு