பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 23

இன்று ஆயிரம் பொன் வருமானம் இருந்தாலும்கூட அதை நான் செல்வி ஹார்ட்காசிலுக்கே விட்டுக் கொடுத்துவிடுவேன்,அவள் தகுதியைப் பெற.

மார்லோ: (தனக்குள்) என்ன அரும் பண்புகள் வாய்ந்த பெண்மை யுள்ளம்! ஆனால் என் உறுதியை நான் இழந்துவிடக் கூடாது. (வெளிப்பட) அன்பே என் உள்ளத்தை உனக்கு விளக்கமாக எடுத்துக் கூறிவிட்டேன். தற்போது நானும் செல்வந்தனாக இருக்கிறேன். ஆகவே என்னை மன்னித்து விடு. மறந்தும் விடு.

(போகிறான்.)

செல்விகேட்: (தனக்குள்) என் பெண்மைக்கு ஆற்றலிருக்கு மானால், இறங்கிவந்து நாடகமாடி அவர் மன ஆழமறிந்தது போல, அவரை மணந்து இன்பம் பெறவும் வழி காண்பேன். இது உறுதி.

(செல்கிறாள்.)

களம் 2

(திருமதி ஹார்ட்காசிலின் அறை; திருமதி ஹார்ட்காசில் நினைவில் ஆழ்ந்திருப்பது போல் அமர்ந்திருக்கிறாள். அவளுக்குத் தெரியாமல் ஒளிந்து காதல் புரிகிற பாவனையில் டானியும் செல்வி நெவிலும் நடிக்கின்றனர். நேரம் முன்னிரவு)

திருமதி ஹா: (தனக்குள்) என்ன விந்தை! நகைப்பெட்டி திடீரென்று காணாமற் போனது, எப்படி மார்லோ மூலமாக என் கைக்கு வந்தது? இந்த மர்மம்தான் சிந்தைக்கு விளங்கவில்லை. எல்லாம் வேலைக்காரர்களின் குறும்புதான் என்கிறான் டானி. ஆனால் இவர்களை ஒரு முடிபோட்டு ஒன்று சேர்த்து வைக்காதவரை இம்மாதிரி கவலைகள் எனக்கு இருந்து கொண்டுதானிருக்கும், அவர்களும் காதலித்துக் கொண்டு தானிருக்கின்றனர். ஆனால் இளம் பிஞ்சுகள்! அவர்கள் கொஞ்சுவது எனக்குத் தெரியாதென்று நினைத்து என் பின்னாலேயே இருந்து குலாவுகின்றனர். (அவர்கள் பக்கம் திரும்பி,வெளிப்பட) இப்போதே என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். இனி மணமும் முடிந்து விட்டால்..