பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

45

டானி: அம்மா, அப்படியானால் நான் மணம் செய்யாமலே இருந்து விடுகிறேன்.

திருமதி ஹா: வேண்டாம்டா கண்ணு. எனக்காக நீ திருமணம் செய்யாமலிருக்க வேண்டாம். மேலும் நெவில் வருந்துவாள்.

(நெவில், டானியைக் கிள்ளுகிறாள்.)

டானி:அடேயப்பா! என்ன நெவில், இப்படியா கிள்ளுவது? நீ எனக்கு உண்மையிலேயே வேண்டாம்.

திருமதி ஹா: பார்த்தாயா, அவளைக் கட்டமாட்டேன் என்றால் அவள் இப்படித்தான் கிள்ளுவாள்.

(டிக்கரி வருகிறான்.)

டானி: வா டிக்கரி, என்ன செய்தி?

டிக்கரி: உங்களுக்கு ஒரு கடிதம்.

டானி: யாரிடமிருந்து?

டிக்கரி: இது இரகசியம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

செ.நெ: (தனக்குள்) ஆ, இது ஹேஸ்டிங்ஸ் அனுப்பியதாகத் தான் இருக்கவேண்டும். எங்கே அத்தை பார்த்து விடப் போகிறாளோ தெரிய வில்லையே!

டானி: (வாசிக்கிறான்) "தோழர் அந்தோனி லம்ப்கின் அவர்களுக்கு, முகவரி மட்டும் தெரிகிறது. மற்ற ஒன்றும் புரியவில்லை... இது... அ... இது...

செ.நெ: வாசித்துவிட்டான். வாசித்து! அது எப்படி உனக்குப் புரியும்? எழுதப்படிக்கத் தெரிந்தால்தானே! நீ வாசித்தது போதும். இப்படிக் கொடு.

டானி: அம்மாவிடம் கொடு. விபரமாக வாசிப்பாள்.

செ.நெ: (பல்லை நெறித்து) சும்மா கிட்டா.

டானி:(அவள் குறிப்பறியாமல்) சும்மா அம்மாவிடம் கொடு.

திருமதி ஹா: (பறித்து வாசிக்கிறாள், செல்வி நெவில் நடுங்குகிறாள்.)