பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அருமை நண்பா,

அப்பாத்துரையம் - 23

என் கண்மணி நெவிலுக்காகத் தோட்டத்தின் கோடியில் காத்திருக்கிறேன்.அவளை இப்பக்கம் அனுப்பிவிட்டு நீ கூறியபடி குதிரை, வண்டியுடன் விரைந்து வா. சில காரணங்களை முன்னிட்டு உடனே புறப்பட்டுப் போக வேண்டியிருக்கிறது. கிழவிக்குத் தெரியாமல் காரியம் நடக்கட்டும். என் நெவிலும் நானும் உன் உதவியை என்றும் மறவோம்.

என்றும் உன் நண்பன்,

ஹேஸ்டிங்ஸ்.

(உரக்க) அட போக்கிரிகளே! பட்டப்பகல் வேசம் போட்டா என்னை ஏய்க்கிறீர்கள். (செல்வி நெவிலை நோக்கி) நீலி, என் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவ எங்கிருந்து வந்தாய்? வா, உனக்கு இனி வரிசை செய்கிறேன். (டானியை நோக்கி) அட மானங்கெட்ட பயலே! உன்னை வளர்த்து ஆளாக்கினதற்கு நீ செய்யும் நன்றியா இது? வறட்டுப்பயலே, இரு, இதோ வந்து உங்களை என்ன செய்கிறேன், பார்.

(கடுஞ்சீற்றத்துடன் போகிறாள்.)

செ.நெ: நான் எத்தனை தடவை குறிப்புக் காட்டினேன், கடிதத்தைக் கொடுக்காதே என்று. நீ குறிப்பறியாத கும்மட்டிக்காய்.குறும்பு பண்ணத் தான் தெரியும். இப்பொழுது கடிதத்தைக் கொடுத்துவிட்டு மண்கூவை மாதிரி விழிக்கிறாய். (மார்லோவும் ஹேஸ்டிங்ஸும் வருகின்றனர்.)

ஹேஸ்: திருமதி ஹார்ட்காசில் வெறிபிடித்தவளைப் போல் என்னைத் திட்டுகிறாள். இதற்குக் காரணம் (டானியை நோக்கி) நீதான். இது முழுதும் உன் கையாலாகாத்தனம், டானி.

மார்லோ: அது மட்டுமா? இந்த வீட் வீட்டிலே தலை காட்ட முடியாதபடி செய்துவிட்டாய்! குறும்புக்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கவேண்டும்.

டானி: ஓகோ, மூன்று பேரும் கூடிக்கொண்டு குற்றஞ் சாட்டு கிறீர்களோ? சரி, நான் குறும்பன்தான். ஆனால் உங்களை விட அறிவில் கொஞ்சமும் குறைந்தவனல்ல என்பதைப் பொழுது விடிவதற்குள் புலப் படுத்துகிறேன். போங்கள்.