பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

(மூவரும் செல்கின்றனர்.)

47

(தனக்குள்) இந்த உலகத்திலே மூளையுள்ளவனுக்குக் காலமில்லை. அனுபவிக்கத் தெரியாத பேராசைக் கிழங்களிடம் பணம். கையாலாகாததுகளிடம் படிப்பு, பகட்டு, பாமர மக்களோ வெறும் ஆட்டுக் கூட்டங்கள். ஒரு டானி இருந்து இதுகள் பூராவையும் ஆட்டி வைக்காவிட்டால்?. ஆம். அதுதான் சரியான வழி. என்னை நாவாரத் திட்டிய இதே மூவரும் என்னைப் புகழாவிட்டால் என் பெயர் டானி இல்லை.

களம் 1

டி

ஐந்தாம் காட்சி

(திரு. ஹார்ட்காசில் மாளிகை: திரு. ஹார்ட் காசிலும், திருத்தகை சார்லஸ் மார்லோவும் உரையாடுகின்றனர். நேரம்: முன்னிரவு)

திரு.ஹா: ஆகாகாகா! அஃகஃகஃ! என்ன நாடகம், சார்ல்ஸ் என்ன நாடகம்! உங்கள் மகன் பண்ணின அட்டகாச காசத்தையும், அதிகார உத்தரவு களையும் நினைக்க நினைக்கச் சிரிப்பாயிருக்கிறது. நீங்கள் விளக்கம் தருவதற்கு முன் அவன்மீது என் உள்ளத்தில் ஒரே கவலையும் கொந் தளிப்பும்தான்.

திருத்தகை சார்ல்ஸ் மார்லோ: கவலை எதற்கு ரிச்சர்டு! அடக்கத் தையும் அமைதியையும் காணோமென்றா? என்னளவில் அவன் அடக்கத்தாலும், அளவுக்கு மீறிய அமைதியாலும் எங்கே பெண்ணின் உள்ளத்தைக் கவரமுடியாமல் போய்விடுகிறதோ என்பதுதான் என் ஓயாத சிந்தனை.

திரு.ஹா: நண்பரே, இனி அந்தக் கவலை வேண்டாம். நம் பிள்ளைகள் இணைப்பால் நம் நட்பு மணம் பெறும் என்ற மகிழ்ச்சி கடந்த நிகழ்ச்சிகள் யாவற்றையும் என் உள்ளத்திலிருந்து மறக்கடித்து விட்டன. அத்துடன் இருவர் செல்வநிலையும் ஒரே நிறைபெறாது காணப்பட்ட போதிலும் என் மகள் தம் புதல்வன் நேசத்தைப் பரிபூரணமாப் பெற்றுள்ள தாகக் கூறுகிறாள்.

திரு.சா. மார்லோ: செல்வநிலைப்பற்றிச் சிந்தனை ஏன் நண்பரே. பிள்ளைகள் முற்றிலும் மனமொத்துப் போகிறார்களா