பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 23

என்பதை இன்னும் கவனிக்க வேண்டும். தங்கள் செல்வி ஏனைய பெண்களைப் போலத் தன் அழகின் செருக்கால் அவசரப்பட்டு அதிக நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதற்கு முற்றும் அவன் சொற்களை நம்பி விடலாமா?

திரு.ஹா: மார்லோவின் காதல் உறுதியைப் பெற்று விட்டதாக அவள் பூரிப்போடு நேரிடையாகக் கூறுகிறாள். திரு.சா.மார்லோ: எனக்கென்னவோ அதை நம்ப

முடியவில்லை.

(மார்லோ வருகிறான்.)

மார்லோ: (திரு ஹார்ட் காசிலை நோக்கி) ஐயா, தவறாகக் கருத்துக் கொண்டு இங்கே தாறுமாறாக நடந்து கொண்டதற்கு வருந்துகிறேன். அதற்காக அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, மனமார மன்னிக்கும்படி உங்களையும் வேண்டுகிறேன்.

திரு.ஹா: நீங்கள் அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். வரப்போகும் இனிப்புக்குச் சுவையூட்டும் சாரம் என்றே இதை நாங்கள் கருதுகிறோம். அதிருக்கட்டும். ஹார்ட்காசிலுடன் நீங்கள் உளங்கலந்து பேசிக் கொண்டீர்கள் என்பதை உங்கள் தந்தை நம்ப மறுக்கிறார்.

சல்வி

மார்லோ: செல்வி ஹார்ட்காசிலை நான் இன்னும் நேரில்

சரியாகக் கூடக் காணவில்லை.

திரு.ஹா:என்ன நேரிடையாகக் கண்டது கூட இல்லையா? ஏன் இவ்வளவு வெட்கப்படுகிறீர்கள். இரண்டு குடும்பமும் ஒத்துப் போன பின்பு உங்கள் சந்திப்பைக் கூறுவதற்கு அஞ்சுவானேன்?

மார்லோ: நமது ஆசார முறையில் ஒரு தடவை சந்தித்தேன். ஆனால் முகத்தைக்கூட நான் ஏறிட்டுப் பார்க்கவில்லை. வெட்கத்தினால், உளங்கலந்து பேசவும் முடியவில்லை. நீங்கள் கருதும் அத்தகைய உணர்ச்சி ஏற்படுமென்றும் எனக்குத் தோன்றவில்லை. நான் போய் வருகிறேன்.

(செல்கிறான்)

திரு.ஹா: (தனக்குள்) ஏது, பேர்வழி புளுகுவதிலும் மிகவும் வல்லவனாயிருப்பான் போலும்! இவன் கையால் அவளைப்