பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

49

பற்றியதை நானே நேரில் பார்த்தேன். நான் பார்த்ததை இவனும் பார்த்தான். அப்படியிருந்தும் நேரில் பார்த்த என்னிடமே எவ்வளவு துணிவோடு புளுகுகிறான். இருக்கட்டும்.(வெளிப்பட) அவன் கூறுவது எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது.

திரு.சா. மார்லோ: அவன் நேரிடையாகத்தான் பேசுகிறான். அவன் பேச்சில் கபடம் கடுகளவும் இல்லை. அப்படி இருப்பதாக எனக்கு இதுவரை எண்ணமும் கிடையாது. நீங்கள் பேசுவதுதான் எனக்குப் புதிராக இருக்கிறது.

திரு.ஹா: இருக்கலாம். ஆயினும் கேட் என்னிடம் நேரிடையாகக் கூறியதையும் என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அவளும் துணிந்து பொய் கூறுபவளல்ல. ஆயினும் பரவாயில்லை. இன்னும் பார்க்கலாம்.

(செல்வி ஹார்ட்காசில் வருகிறாள்.)

கேட், சார்லஸ் மார்லோ உன்னுடன் கலந்து பேசிக் கொண்ட துண்டல்லவா?

செல்வி கேட்: ஆம், அப்பா, ஒரு முறை அல்ல, பல தடவை உள்ளங் குழைந்து பேசியிருக்கிறார்.

திரு. ஹா: அவன் உன்னிடம் நேசமும் பாசமும் என்ற உறுதி மொழிகள்...

செல்வி கேட்: ஆயிரம் தந்துள்ளார். அப்பா, உண்மையில் அவர் என்னிடம் மாறாக் காதல் கொண்டிருக்கிறார்.

திரு. சா. மார்லோ: (செல்வி ஹார்ட்காசிலை நோக்கி) அப்படி என்னதான் உன்னிடம் பேசினான்?

செல்வி கேட்: காதலர் வழக்கமாகப் பேசுகிறபடியேதான் அவரும் பேசினார். மதியே, மலரே, மாங்குயிலே என்று இனிக்க இனிக்கப் பேசி என்னையே மணப்பதாகக் கூறினார்.

திரு.ஹா: சரி, நீ போய் உன் அறையிலிரு. நாங்கள் பின்னால் வருகிறோம்.

(போகிறாள்)

திரு. சா. மார்லோ: நண்பரே, நீங்கள் நினைக்கிறபடி ட்டுக் டுக் கட்டி அழகாகப் பேசுவது சார்லஸ் அல்ல. உங்கள் செல்வி