பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

அப்பாத்துரையம் - 23

கேட்தான். சார்ல்ஸுக்கு இத்தகைய பேச்சுக்களே பேசத் தெரியாது.

திரு. ஹா: எல்லாம் விரைவில் வெளிச்சமாகிவிடும். வாருங்கள் உணவுண்ணச் செல்வோம்.

களம் 2

(போகிறார்கள்)

(திரு ஹார்ட்காசில் மாளிகையைச் சார்ந்த தோட்டம். ஹேஸ்டிங்ஸ் யாரையோ எதிர்பார்த்து நிற்கும் பாவனையில் இருக்கிறான். காலம்: இரவு.)

ஹேஸ்டிங்ஸ்: (தனக்குள்) சே, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது! அவள் இனி எங்கே வரப்போகிறாள்? கைக்கு வந்த கனியைத் தட்டி யெறிந்தவன் மீண்டும் கனி கொண்டு வருவான் என்று நானும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.நான்

ஒரு மடையன்.

(திடுமென டானி முன் வந்து நிற்கிறான்.சேறும் அழுக்கும் படிந்த ஆடையுடன்)

டானி: நிச்சயம் நீர் ஒரு மடையர் தாம். ஆனால் என்னை நம்பியதால் அல்ல; நம்பாததால்.

ஹேஸ்: நீதான் உண்மையான நண்பன். சொன்னபடி தவறாமல் வந்து விட்டாய். ஆமாம், உன் ஆடையில் ஏன் சேறும் அழுக்கும் படிந்திருக்கின்றன?

டானி: இரவு முழுவதும் ஆறு குளம் என்று பாராமல் வண்டியோட்டியதன் விளைவுதான்!

ஹேஸ்: இரவில் யார் யாரை வண்டியில் அழைத்துச் சென்றாய்? அவ்வளவு அவசரமான வேலை என்ன?

L டானி: எல்லாம் உங்கள் காரியத்தில் தலையைக் கொடுத்ததால் வந்த வம்பு- நான் பம்பரமாய்ச் சுழலுகிறேன். பறிகொடுத்த நகைப் பேழை திரும்பவும் என் சின்னம்மாவுக்குக் கிடைத்தாலும் கிடைத்தது, என் உயிரையே வாங்கி விட்டாள்! அவளைப் பிடித்திருந்த கிலியைப் போக்க, தன் தாய் வீட்டுக்கே