பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

51

நெவிலுடன் ஓடிப் போய் விடத் துடியாய்த் துடித்தாள். வேறு வழியின்றி அழைத்துச் செல்கிறேன்.

ஹேஸ்: இன்னும் பயணம் முடியவில்லையா?

டானி: அதற்குள்ளாகவா? அது நாற்பது நாழி தொலைவு இருக்கிறது. இரவு பூராவும் பிரயாணம் செய்தாலும் போய்ச் சேருவது முடியாத செயல்.

ஹேஸ்: டானி, நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை.பயணம் இனித்தான் துவங்க வேண்டுமென்கிறாய். பயணத்தால் ஆடை சேறாகி விட்டதென்றாய். இதில் எது உண்மை?

டானி:இரண்டும் உண்மைதான்.பயணத்தின் நடுவில் தான் இங்கே வந்திருக்கிறேன். சென்ற இரண்டரை மணி நேரத்தில் இருபத்தைந்து நாழி தொலை ஓட்டியிருக்கிறேன்.

ஹேஸ்: இருபத்தைந்து நாழி சென்றவன் இங்கே எப்படி வந்து தொலைந்தாய்?

L டானி: விபரம் புரியாமல் அவசரப்படுகிறீர்களே, இருபத்தைந்து நாழியும் நான் ஒழுங்காகச் சின்னம்மா விருப்பப்படி வண்டியைச் செலுத்தியிருந்தால், இங்கே வந்து உங்களைப் பார்க்கவும் முடியாது; உங்கள் நெவிலும் இங்கே திரும்பி வந்திருக்க முடியாது. எல்லாம் உங்கள் நன்மையைக் கருதித்தான் இந்த இடத்தைச் சுற்றி இருபத்தைந்து நாழியும் ஓட்டியிருக்கிறேன்.

ஹேஸ்: உன் பேச்சு இன்னும் புதிராகத்தான் இருக்கிறது.

டானி:(தனக்குள்) இந்தப் படித்த முட்டாள்களுக்கெல்லாம் இப்படித்தான், கொஞ்சமும் குறிப்புத் தெரிவதில்லை. (வெளிப்பட) ஐயா, உங்களை ஏமாற்றி எங்கள் சிற்றப்பா வீட்டுக்கு அனுப்பியது போல, எங்கள் சின்னம்மாவையும் ஏமாற்றி இவ் வீட்டையே சுற்றிச் சுற்றி வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கிறேன். உங்கள் நெவிலும் இங்கேயே தானிருக்கப் போகிறாள். இப்போது புரிந்ததா?

ஹேஸ்: அடேயப்பா! நீ புத்தியில் முதல் தரப் புலிதான்!