பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அப்பாத்துரையம் - 23

டானி: இப்போது தெரிந்ததா? ஆனால் நான் இதனால் படும்பாடு அந்த நாய்கூடப் படாது.

ஹேஸ்: டானி, நீ என் ஒப்பற்ற நண்பன். உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்!

டானி: நேற்றுத் திட்டினீர்கள். இப்போது காரியம் விளங்கும் போது, நான் நண்பனாகக் காணப்படுகிறேன். உங்கள் நன்றி பொறுமையுடனும் திறமையுடனும் காரியம் முடிப்பது தான். நான் நெவிலை உங்களுக்காகக் காக்க வைத்திருக்கிறேன். பிரயாணத்தில் வெறுப்படைந்து சிற்றன்னை இடையில் தங்க நினைக்கிறாள். இச்சமயம் உங்களுக்குத் திரானியிருந்தால் நெவிலை அழைத்துச் சென்று விடுங்கள். கிழவியை நான் சரிப்படுத்திக் கொள்கிறேன்.

களம் 3

(திரு.ஹார்ட்காசில் மாளிகையிலிருந்து சிறிது தொலைவில் திருமதி ஹார்ட் காசில் வண்டியில் அமர்ந்திருக்கிறாள்.டானி வண்டியை ஒட்டிக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறான்.

காலம்: இரவு.)

திருமதி ஹா: அப்பா எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. நெவிலை இறக்கிவிட்டு அவளை எங்கேயோ ஓடவிட்டுவிட்டாய். வண்டி தடால் தடாலென்று தூக்கிப் போட்டு எலும்புகள் அதிகமாக மீதியில்லாமல் நொறுங்கி விட்டன. போதும் பயணம். இங்கேயே தங்கிவிடலாம் என்று எண்ணுகிறேன்.

L டானி: எல்லாம் உன்னால்தானம்மா? பகல்வரை பொறுத்திருக்க மாட்டேனென்னு இரவில் பயணம் செய்து, இப்போது நாற்பது நாழிக்கு அப்பால் நடுக்காட்டுக்கு வந்திருக்கிறோம். உனக்கு மண்டையுடைச்சான் திடல் தெரியுமா?

திருமதி ஹா: ஐயய்யோ, அது திருடர், கொலைகாரர் மிகுந்த இடமாயிற்றே! அங்கா வந்திருக்கிறோம்?

டானி: அங்கேதான் வந்திருக்கிறோம். ஆனால் அஞ்ச வேண்டியதில்லை, அம்மா. இங்குள்ள ஐந்து கொள்ளைக்