பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

53

காரர்களில் இருவரைத் தூக்கிலிட்டு விட்டார்கள். போக மூன்று பேர்கள்தான் இருக்கிறார்கள் அவர்களால் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது...ஆ அதோ நம்மைப் பின்னால் தொடர்வது யார்?.. அடடா, அது வெறும் மரந்தான். நான் ஆளென்று எண்ணி விட்டேன். அம்மா, நீ ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்.

திருமதி ஹா: அப்பா, அச்சமே போதும். என்னைக்

கொல்ல!

L டானி: அம்மா, அதோ அந்தப் புதருக்குள் ஒரு தலைப்பாகை தெரிகிறதே.

திருமதி ஹா: ஐயோ, நான் என்ன செய்வேன்?

L டானி: அம்மா அது ஒன்றுமில்லை. நீ கலவரப்பட வேண்டாம்.

திருமதி ஹா: டானி, அதோ பார். உண்மையிலேயே ஒரு மனிதன் வருகிறான். அவன் கண்ணில் பட்டால் போச்சு, போ!

டானி: (தனக்குள்) ஓகோ, வருகிறது சிற்றப்பாதான். சரி, வரட்டும். சரியான நாடகம் ஆடிவிட வேண்டும். (வெளிப்பட) அம்மம்மா, அவனிடம் துப்பாக்கியிருப்பதாகத் தெரிகிறது. நீ இறங்கிப் புதரில் மறைந்துகொள். நான் அவனைச் சரிப்படுத்தி விடுகிறேன். ஆனால் ஆபத்து வருவதாயிருந்தால் நான் செருமுவேன். மூன்று தடவை செருமினால் மிகவும் ஆபத்து என்று பொருள். நீ மட்டுமாவது ஓடிவிடு.

டானி.

திருமதி ஹா: (அழுகுரலில்) அப்படியே செய்கிறேன்,

(சிறிது தொலைவிலுள்ள ஒரு புதருக்குள் சென்று மறைந்து கொள்கிறாள். திரு ஹார்ட் காசில் வருகிறார்)

திரு ஹா: ஆ, டானி! நீ எங்கே இப்படி? அம்மாவையும் நெவிலையும் அழைத்துச்சென்றதாக அல்லவா கேள்விப்பட்டேன். நீ மட்டும் வருகிறாய். அவர்கள் எங்கே?

டானி: அவர்களை பெடிக்ரி அம்மாமி வீட்டில் கொண்டு விட்டிருக்கிறேன். அஃகஃ.! (செருமுகிறான்)