பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் - 23

திருமதி ஹா: (தனக்குள்) ஐயய்யோ, பையனுக்கு ஆபத்து வருகிறது போலிருக்கிறது.

திரு.ஹா: என்னடா எல்லோரிடமும் புளுகுவது மாதிரி என்னிடமும் புளுகுகிறாய். பெடிக்ரி அம்மா வீடு நாற்பது நாழி தூரத்திலிருக்கிறது. மூன்று மணி நேரத்திற்குள் எப்படிப் போய்த் திரும்ப முடியும்? புளுகினாலும் கூடப் பொருந்தும் படியாகப் புளுக வேண்டாமா?

டானி: ஓடுகிற குதிரை அரபிக் குதிரையாயிருந்தால் நீண்ட தூரமும் கிட்ட வந்துவிடும் என்பார்கள். அதிலும் ஓட்டுபவன் டானியாயிருந்தால் தூரமே தோன்றாது. அஃகஃ!

திருமதி ஹா: ஐயோ, பையனுக்கு மிகவும் ஆபத்துப் போலிருக்கிதே (உரத்து) ஐயோ!

டானி: வேறு யாருமல்ல. அஃகஃ! 'நான் எனக்குள்ளேயே பேசிக்கொண்டிருக்கிறேன். அஃகஃ- நாற்பது நாழி தூரம் மூன்றுமணி நேரத்தில் நடந்து வந்ததால் உடல்நலமில்லை. மேலும் குளிர் மிகுதி. வீட்டுக்குச் செல்வோமா அப்பா? அஃகஃ. திருமதி ஹா: ஐயோ, ஐயோ!

திரு.ஹா: கட்டாயம் மற்றொரு குரல்தான். புதரிலிருந்து கேட்கிறது.போய்ப் பார்க்கிறனே.

L டானி: ஐயோ, அங்கே போகவேண்டாமே! (திரு ஹார்ட்காசில் புதர் நோக்கிச் செல்கிறார்.)

திருமதி ஹா: (எழுந்து வந்து) ஐயா, என் பிள்ளையை விட்டுவிடு. இதோ என் பணத்தையும் நகையையும் தந்து விடுகிறேன். காவலரிடம் ஒன்றும் சொல்லமாட்டேன். என் பிள்ளையை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடு. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு.

திரு.ஹா: இது யாரது? - ஆ, டாரதி! இது என்ன கோலம்? என்ன நாடகம் இது?

திருமதி ஹா: டிக், நீங்களா? நான் திருடன் என்றல்லவா நடுநடுங்கினேன். நீங்கள் எங்கே இவ்வளவு தூரம் வந்தீர்கள்? அந்தோ என்னைத் தேடிக் கொண்டா வந்தீர்கள்?