பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

55

திரு.ஹா: டாரதி உனக்கென்ன பைத்தியமா? நம் வீட்டுத் தோட்டத்தின் பின் இருக்கிறாய். இவ்வளவு தூரம் என்று எந்த அர்த்தத்தில் கேட்கிறாய்?

திருமதி ஹா: ஆ, நம் வீட்டுப் பக்கமாக இருக்கிறேனா? (சுற்று முற்றும் பார்த்துவிட்டு) ஆம், இதோ நம் தோட்டத்துப் பின்பக்க வாசல். எல்லாம் இப்போதுதான் தெரிகிறது! இந்த டானிப்பயல் வண்டியைச் சுற்றிச் சுற்றி ஓட்டி எங்களை ஏமாற்றியிருக்கிறான். அடே,டானி!

L

திரு ஹா: அவனை ஏன் குறை சொல்லுகிறாய்? எல்லாம் நீ செல்லங் கொடுத்துக் கொடுத்துக் கெடுத்த கேடுதான்.

திருமதி ஹா: (சீற்றத்துடன்) ஏண்டா டானி, போக்கிரிப் பயலே! உன்னை வளர்த்த பாவத்திற்காகவா இப்படி ஏமாற்றுகிறாய்? இதோ உன் எலும்பை முறிக்கிறேன், பார்.

டானி: (சுற்றி ஓடி) அம்மா, அப்பாவே சொல்கிறார், நீதான் என்னைக் கெடுத்தாயென்று, ஊரிலும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

(ஓடுகிறான். திருமதி ஹார்ட்காசிலும் பின்பற்றுகிறாள்.)

திரு ஹா: பையன் பைத்தியக்காரக் கோமாளிதான். ஆனால் அவன் சொல்வதிலும் பொருள் இருக்கிறது.

(செல்கிறார்.)

களம் 4

(ஹார்ட் காசில் மாளிகை. திருத்தகை சார்ஸ் மார்லோவும் செல்வி ஹார்ட் காசிலும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். நேரம்: இரவு.)

திரு.சா. மார்லோ: கேட், நீ சொல்வதுதான் உண்மை என்று ஒப்புக்கொண்டால், சார்லஸ் மனந் துணிந்த பொய்யன் என்று ஒப்புக் கொள்ளத் தயாராயிருக்க வேண்டும். அல்லது இதற்கு நேர்மாறாக அவன் நேர்மையுடையவன் என்று நம்பலாமென்றாலோ, நீ கூறுவது பொய்யென்று கருதியாக வேண்டும். இரண்டும் எனக்கு மனவருத்தம் தரக்கூடியவைகளாக இருப்பதுதான் பெரிய தொல்லையாக இருக்கிறது.