பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

57

மார்லோ: (தனக்குள்) ஆ, இவள் அறிவு எத்தனை நிறைவுடையது. இவளுடன் பழகும் ஒவ்வொரு வினாடியும் இவள் தகுதியும் வளருகிறதேயன்றிக் குறையவில்லை. (வெளிப்பட) என் தவறுகள்தான் தற்சமயம் என்னைக் கட்டுப்படுத்துகின்றன. நான் போய்த் தீரவேண்டும். ஆனால் என் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்ட ஆர்வத்தை இனி நெடுநாள் அடக்கி அழித்து விடமுடியாது. பெரியோர்களுக்காக நான் எப்போதும் வாழ முடியுமா? என் உணர்ச்சி என்னை மீறி வளர்கிறது. இதற்குமுன் செல்வம், கல்வி, சமூக மதிப்பு ஆகிய எத்தனை தடைகள் இருந்தாலும் நான் அவற்றை மீறத் துணிந்துவிட்டேன். இதுவே என் முடிந்த முடிபு.

செல்வி கேட்: சரி, உங்கள் உணர்ச்சி எவ்வழி நாடுகிறதோ அவ்வழி தாங்கள் செல்லுவது பற்றி எனக்கும் மகிழ்ச்சியே நான் வருகிறேன்.

(போக முயல்கிறாள். மார்லோ மெல்லத் தடுக்கிறான்.)

மார்லோ:(கனிந்த குரலில்) அம்மணி, என் உள்ளம் நாடிய இடம் வேறு எங்கும் இல்லை. இதோ என் முன் நிற்கும் அழகு வடிவத்தைச் சுற்றித்தான் என் உள்ளம் ஓடுகிறது. இதில் குற்றம் என் கண்ணினுடையது அன்று; உன் அழகினுடையது.உன்னைக் கண்ட வினாடியிலேயே என் கண்கள் உனக்கு அடிமையாகி விட்டன. உன்னுடன் போய் பேச, பழகப் பழக என் உள்ளமும் உணர்வும் அது போலவே உன் வசமாகி விட்டன. இதிலும் குற்றம் என்னுடையதல்ல; உன் நடையழகு. பண்பழகு. அறிவுத் திறம் ஆக யாவும் என்னைச் சிறை செய்கின்றன. உன் எளிமையில் புதிய புதிய நளின நயம் காண்கிறேன். உன் இயற்கை எழிலில் புதிய புதிய நெளிவு நயங்களைக் காண்கிறேன். உன் துணிச்சலில் நான் என் காதலுக்காக உறுதியைப் பெறுகிறேன். வாய்மையின் நேர்மையை அது எனக்குக் காட்டுகிறது.

செல்வி கேட்: (தனக்குள்) என் காதுகள் என்னை ஏமாற்று கின்றனவா? முகம் கவிழ்த்து நின்ற செல்வர் எங்கே, கைப்பிடித்திழுத்துக் கவிதையை வாரிப்பொழியும் இக்கலைக் கடல் எங்கே?