பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம் - 23

மார்லோ: உன் வாய்மொழி கேளாமலே என் வாய் திறந்து நான் பேசிவிட்டேன். உன் முடிவு எதுவாயினும் பரவாயில்லை. பெரியோர்கள் விருப்பம் அறியாமலே நான் எதிர்த்து நிற்க துணிந்து விட்டேன். உன் எண்ணத்தில் ஒத்துழைப்பு, கனியிதழ் பூத்த ஓர் ஆதரவுச் சொல்- கிட்டினால், அவர்களை அடிபணிந்து கெஞ்சியோ, உதறித் தள்ளியோ, உன்னுடன் என் வாழ்க்கையைப் பிணைத்து ஒன்றுபடுத்த நான் தயங்க மாட்டேன். உன் வாய்மொழிக்குக் காத்திருக்கிறேன்.

திரு

(திரைக்குப் பின்)

ரு.சா. மார்லோ: நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. .ஆ, இந்தப் பயலுக்கு என்ன துணிச்சல்! என்ன இரண்டகம்.

திரு.ஹா: பொறுத்தது பொறுத்தோம். இன்னுஞ் சற்றுப் பொறுப்போம்.

செல்வி கேட்: அன்பரே, உங்கள் முதல் துணிவு உங்கள் கடமையுடன் இணைந்தது. இப்போதைய துணிவு உணர்ச்சியடிப் படையானது. எங்களைப் பற்றிய தங்கள் நல்லெண்ணத்துக்கு நான் நன்றியுடைவள்தான். ஆனால் உணர்ச்சித் தூண்டிலில் உங்களைக் கண்ணியிட்டுப் பிடிக்க நான் விரும்பவில்லை. சிறிதளவுகூட எதிர்காலத்தில் நீங்கள் பின்னோக்கி வருந்தத்தக்க எச்செயலுக்கும் உங்களை நான் உடந்தையாக்க மாட்டேன். மேலும் நாங்கள் இன்பத்தை ஒரு சிறிது குறைத்துப் பெறும் இன்பம்கூட எனக்கு எப்படி இன்பமாக இருக்குமென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

மார்லோ: என் உள்ளத்தின் இன்ப அரசி. உன்னை இல்லாமல் நான் எந்த இன்பமும் அடைய முடியாது. நான் என்றேனும் கழிவிரக்கம் கொள்வதானால், அது இப்போதுதான். முன்பே உன் அழகைமட்டுமன்றிப் பண்பையும் உணர்ந்து முழுமனதுடன் உன்னைக் காதலால் பிணைத்திருக்க வேண்டும். நான் வருங்காலத்தில் ஓயாது கழிவிரக்கம் கொள்ளப் போவது காதலை எண்ணியன்று; அதனைக் கெடுக்க ஒரு சாக்காயிருந்த பாழும் கடமையைப் பற்றித்தான். அது உண்மையில் கடமைகூட அல்ல, நிறை காதலறியாத நிலையில் ஏற்பட்ட மனத்தளர்ச்சி