பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

59

மட்டும்தான். ஆகவே நீ போகப் போவதில்லை. உன்னை மீறியும் உன் காதலுக்காகப் போராடவே போகிறேன்.

செல்வி கேட்: ஐய, ஏன் இப்படித் இப்படித் தவறான உணர்ச்சிகளைத் தண்ணீர்விட்டு வளர்க்கிறீர். நம் பழக்கம் எப்படித் தொடங்கிற்றோ அப்படி முடியட்டும். ஏதோ ஒன்றிரண்டு கணநேரம் நானும் உம்மைப்போல் உணர்ச்சி வசப்பட்டு உம்போக்கை ஒத்துக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் தவறுதலைப் பயன்படுத்த வேண்டாம். மேலும் என் சிறு தவறுதலை நீடிப்பதால் எனக்கு என்ன பயன்? அதனால் ஏற்படும் தொடர்பு என் பெயரைக் கெடுத்து என் வாழ்க்கையைப் பாழாக்கும். ஆகவே தங்கள் காதல் வேட்டை யிலிருந்து எனக்குத் தயவு செய்து விடுதலை தாருங்கள்.

மார்லோ: (அவள் காலடியில் மண்டியிட்டு) நான் வேட்டையாடவில்லை.மன்றாடுகிறேன்.நான் என் இன்பத்துக்காக வாதாடவில்லை. என் வாழ்வுக்காகத்தான். நீ என்னைக் காதலிக்காமலில்லை. ஆனால் என் காதலை ஐயுற வேண்டாம். உன் காதலுறுதி பெற்றாலன்றி நான் வாழ்க்கையில் நம்பிக்கை பெறப்போவதில்லை.

திருத்தகை சார்லஸ்: திரு. ரிச்சர்டு, விடு; இனி என்னால் பொறுத்திருக்க முடியாது. (திரையைத் திடீரென நீக்கி) அட அண்டப்புளுகா, என்னிடம் என்ன சொன்னாய்? இங்கே என்ன நாடகம் ஆடுகிறாய்? இத்தனை பொய்யன் என்று தெரிந்திருந்தால் உன்னை இந்த வீட்டிற்கு அனுப்பியேயிருக்க மாட்டேனே?

மார்லோ: இது என்ன புது நிகழ்ச்சிகள். எனக்கு ஒன்றும்

விளங்கவில்லையே!

திருத்தகை சார்லஸ்: ஆகா, அடுத்த காட்சி! இத்தனை நாடகம் எங்கிருந்தடா கற்றாய்.

திரு.ஹா: அன்பரே, நீர் குற்றமொன்றும் செய்து விடவில்லை. ஆனால் ஏன் இத்தனை இரண்டகம். என் புதல்வியைக் கண்டதேயில்லை என்று என்னிடமும் உம் தந்தையிடமும் கூறினீர். இப்போது அவளிடம் கடமை மீறிக் காதலில் குதிப்பதாகக் கவிதை அளக்கிறீர்.