பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 23

மார்லோ: தங்கள் மகளா, இதுவா? இவள் செல்வி ஹார்ட்காசில் அல்லவே.

திருத்தகை சார்லஸ்: என்னடா உனக்குக் கண்மாறாட்டம் ஏதாவது உண்டா?

செல்வி கேட்: என் அருமை மார்லோ! நான் செல்வி ஹார்ட் காசில்தான். நீங்கள் முகம்பார்த்துப் பேச அஞ்சிய அதே செல்வி ஹார்ட்காசில்தான். ஆனால் செல்வி ஹார்ட்காசில் என்ற நிலையில் காண அஞ்சிய நீர் விடுதிக்காரப் பெண் என்று

னைத்த போது கையைப் பிடித்தீர். வேலைக்காரி என்று நினைத்துக் காதலித்தீர். இப்போது என்னென்ன நினைத்தோ என்னை மணம் செய்து கொள்ளத் துணியும் அளவுக்கு வந்துவிட்டீர்.

திரு ஹா: என்ன கேட், அவருக்கு மேல் நீ நாடகம் தொடங்கி விட்டாயே இது என்ன?

செல்வி கேட்: ஆம், அப்பா. இவர் பெண்களிடம் வகைவகையாக நடக்கிறார். நானும் இவரை வகைவகையாகத் தோன்றி அளந்து பார்க்கிறேன்.

மார்லோ: அம்மணி, நான் ஒன்றும் தவறாக உங்களிடம் நடக்க வில்லை. முதலில் உங்களைக் காணாதது என் கூச்சம். உங்களை விடுதிகாரப் பெண் என்று நினைத்தது ஏமாற்றம். ஆனால் அப்போதுதான் நான் ஆளைக் கண்டேன். பின் பழகப்பழக என் காதலுரிமை கோரினேன். இதில் தவறு என்ன? செல்வி ஹார்ட்காசில் என்று அறியாமையினால்தான் நான் நம் பெற்றோரிடம் பொய் சொல்லும் குற்றத்திற்கு ஆளானேன்.

திரு.ஹா: இவர் கூறுவது சரிதானா, கேட்.

செல்வி கேட்: (தலைக்கவிழ்ந்த வண்ணம்) ஆம், அப்பா உண்மையில் அவர்பேரில் குற்றம் இல்லை. அவர் கூச்ச முடையவர் என்பதை நீங்கள் நம்பவில்லை. அவர் துணிச்சல் பேர்வழி என்பதை நான் நம்பமுடியவில்லை. இப்போது எல்லாரும் எல்லாவற்றையும் கண்டு கொண்டோம். டானியின் குறும்பு நாடகம் இப்படியெல்லாம் எல்லாரையும் ஆட்டி வைத்து வருகிறது.