பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

61

(கூக்குரலிட்ட வண்ணம் திருமதி ஹார்ட் காசில் நுழைகிறாள்.)

திருமதி ஹா: ஐயோ, ஐயோ; என் செல்வமருகி போய் விட்டாளே என் செய்வேன். என் கண்மணி போய் விட்டதே?

திரு ஹா: மருகியா, நெவிலா. ஏன், ஏன், என்ன?

திருமதி ஹா: அந்தப் பாவி ஹேஸ்டிங்ஸ் கொண்டு ஓடிப் போகிறானே.யாராவது போய்ப் பிடிக்கக்கூடாதா? அந்தப் பயல் டானி கூட உடந்தையாய் விட்டானே!

திருத்தகை சார்லஸ்: யார்? மார்லோவின் நண்பன் ஹேஸ்டிங்ஸா? அவன் தங்கமான பிள்ளையாயிற்றே. அவனைத் தானே நான் என் பண்ணையை மேல்பார்க்க அமர்த்த எண்ணியிருக்கிறேன். அவனா இப்படிச் செய்கிறான்.

திரு. ஹா: அவனைவிடத் தான் நெவிலுக்கு வேறு நல்ல கணவன் யார் வரப்போகிறார்கள்?

(ஹேஸ்டிங்ஸும் நெவிலும் வருகின்றனர்)

ஹேஸ்டிங்ஸ்: (திரு. ஹார்ட்காசில் முன் மண்டியிட்டு) ஐயா, தங்கள் மருகியைக் காதலித்து நான் இட்டுச் செல்ல முனைந்திருந்தேன். அதற்காக வருந்துகிறேன். நான் எவ்வளவு சொல்லியும் அவள் என் காதலைவிட அத்தையிடமிருக்கும் தன் நகையையே பெரிதும் விரும்பி வர மறுக்கிறாள். உங்கள் மருகியாயிற்று, அவள் ஆசையாயிற்று இனி எனக்கு இரண்டின் தொடர்பும் வேண்டாம்.

செ.நெ: (திருமதி ஹார்ட் காசில்முன் மண்டியிட்டு) அத்தை, அத்தை! என் குடும்ப நகையை விட்டும் எனக்குப் பிரியமனம் வரவில்லை. என் காதலரை விட்டும் என்னால் வாழ முடியாது; இரண்டும் உங்கள் பிடியில் தானிருக்கிறது. உங்களை மன்றாடிக் கேட்கிறேன். அவர் போகுமுன் தடுத்து எனக்கு இரக்கம் காட்டுங்கள்.

திருமதி ஹா: அப்படியே. என் டானி உங்கள் கட்சி, இனி யாருக்காக நான் குறுக்கே நிற்கவேண்டும்.

திரு ஹா: (ஹேஸ்டிங்ஸை நோக்கி) அன்பரே, அவசரப்பட வேண்டாம். நெவிலை நான் நன்கு அறிவேன். அவள் நகைப்பித் துடைய வளல்ல. அவள் தன் தாயின் பரிசைவிட்டுச் செல்ல