பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் - 23

விரும்பாதது இயல்பே. அதைத் தான் இப்போது டாரதி கொடுக்க இணங்கினாள். ஆகவே அவளை ஏற்றுக் கொள்வதுடன், எங்கள் விருந்தினராகவே தங்கியிருக்க வேண்டுகிறேன்.

ஹேஸ்டிங்ஸ்: அப்படியே.

மார்லோ: அன்ப, வெற்றிகரமான உங்கள் காதலைப் பாராட்டுகிறேன்.

ஹேஸ்டிங்ஸ்: (திருத்தகு சார்லஸை நோக்கி) எங்களுடன் நண்பன் மார்லோவும் பல மாறாட்டங்களுக்கு ஆளானவனே. அவன் பிழைகளைப் பொறுத்து அவன் காதலியை அவனுடன் சேர்த்து வைக்கக் கோருகிறேன்.

திருத்தகை சார்லஸ்: கரும்பு தின்னக் கைக்கூலியா? என்னளவில் அவன் நிலையை உணர்ந்தேன். திரு ஹார்ட் காசில் மனப்படியாவும் நடக்கட்டும்.

திரு. ஹா: எனக்கும் முழுதும் மகிழ்ச்சியே. கேட் மனமிருந்தால் அவர்கள் மணத்துக்குத் தடையில்லை.

மார்லோ: கேட், இப்போது மீண்டும் கேட்கிறேன். என் வாழ்க்கைத் துணையாக நின்று என் காதலை ஏற்க வேண்டுமென்று கோருகிறேன்.

செல்விகேட்: அப்படியே சார்லஸ்.

திருத்தகை சார்லஸ்: நாளையே சார்ல்ஸ்-கேட் திருமணத்தையும் அத்துடன் ஹேஸ்டிங்ஸ் -

நெவில் திருமணத்தையும் நடத்திவிடுவோம். இவ்விரவின் கோளாறுகள் இரவுடன் கழிந்து நாளை புதுவிழா மலர்க.

ஹேஸ்டிங்ஸ்: அத்துடன் ஒரே ஒரு வேண்டுகோள். நம் நாடகம் முழுவதற்கும் தோன்றாத் துணையாயிருந்த டானி லம்ப்கினை நாம் மறந்துவிட முடியாது. திருமதி ஹார்ட்காசில் அவன் மீதுள்ள கோபத்தை மாற்றி அவனை ஏற்றருளும்படி கோருகிறேன்.

திரு. ஹா: அவனுக்கு உண்மையில் இருபது வயதாகி விட்டது. அவனை நெவிலுக்கு மணம் செய்வதற்காகவே அவள் வயதுரிமையை டாரதி மறைத்து வைத்திருந்தாள். அவன்