பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

63

மோசமான வாழ்க்கையை வெறுத்தே நானும் தலையிடவில்லை. ஆனால் இன்று அவன் கூரிய அறிவை எல்லாரும் கண்டுகொண்டோம். அவனுக்கு அவன் உரிமையை அளித்தால் அவன் திருந்துவது உறுதி. ஆகவே இன்றே அவன் தந்தை உரிமையை அவனுக்குத் தருகிறேன்- டாரதியும் அதற்கு இசைவாள் என்று நம்புகிறேன்.

திருமதி ஹா: எனக்கு இப்போது எல்லாம் முழுச் சம்மதமே. அவன் திருந்துவதில் எனக்கும் மகிழ்ச்சியே.

டானி: என் திருத்தம்பற்றிக் கவலைவேண்டாம். உங்கள் அனை வரையும் திருத்தியவன் நான். நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயம் வீண்போகாது. என் உரிமை வந்து விட்டதால் நான் இனிக் கருத்தற்ற வாழ்வு வாழப் போவதில்லை.

கள்ளமிலா உள்ளமுடைய குறும்பு வாழ்க

காதலர் மடமை வெல்க.

பிறர் கடமை பாராது தம் கடனாற்றும் பித்தர் நீடூழி வாழ்க.