பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

65

இந்த நூலைப் பற்றி

வங்க இலக்கியத்தின் சொக்கத் தங்கமாக விளங்குகிறது நூர்ஜஹான் நாடகம்! இன்று உலக இலக்கிய அரங்கிலே அதற்குரிய ஒப்பற்ற பெருமை அது. வங்கநாட்டின் தலைசிறந்த கலைப் பண்பைக் காட்டுவதாலேயே ஆகும்.

‘நூர்ஜஹான்' கற்பனைக் காவியமல்ல. சரித்திரம் தழுவிய நாடக ஓவியம்! இந்திய வரலாற்றிலே முக்கிய பங்கு பெறும் ஒரு சரித்திரத் தலைவியின் வாழ்க்கையை வடித்துத் தருகிறது.படிக்கப் படிக்கச் சுவைபயக்கும் சம்பவங்கள் பலப்பல நிறைந்து காணப்படும் இந்நாடக நூலில், நூர்ஜஹான், லைலா, மகபத்கான் ஆகியோர் மக்கள் உள்ளமென்னும் வானிலே என்றென்றும் நின்று நிலவிவரும் நிலைபெற்ற உயரிய பண்போவியங்கள்! உயிர்த்துடிப்புகளை ஒலிபரப்பும் உன்னத உணர்ச்சிச் சித்திரங்கள்!

66

ஓர் னம் மற்றோர் இனத்தை அடக்கியாளல் நிலையல்ல; இனப் போராட்டத்தில் வெற்றி பெற்றவர் எளிதில் தோல்வியே ஏற்கின்றனர்..." என்று அறிஞர் நவகிருஷ்ண கோஷ் கழறிய கருத்துக்களை விளக்கும் இனிய காவியமாக இந்நாடகம் அமைந்திருக்கிறது.