பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நூர்ஜஹான்

காட்சி 1

(பர்துவான் நகரடுத்த தாமோதர் ஆற்றங்கரையிலுள்ள ஷேர்கான் இல்லத்தின் தோட்டம்; கன்னியர் லைலாவும் கதிஜாவும் ஆடிப்பாட, ஷேர்கானும், மேஹர் உன்னிஸா என்னும் நூர்ஜஹானும் கண்டு மகிழ்ந் திருக்கின்றனர். காலம். 1605-ஆம் ஆண்டு, ஓர்நாள் மாலை.)

லைலாவும் கதிஜாவும்:

பொன்னாடு!

பொங்குவள வங்கநாடு

(பொன்)

பூவையர்போல்

பூங்கொடிகள் பூத்துக் குலுங்கும்

(பொன்)

தென்மலையந் தேன்கமழும்

தமிழ்த் தென்றல் வீசும்,

திரளருவி இசை யெழுப்பித்

தீங்கவிதை பேசும்!

(பொன்)

பொன் மிலைந்த பூங்கொன்றை

பொலியும் வள நாடு,

புகழ்நாடு பொருவில் எழில்

பொங்கும் வங்க நாடு!

(பொன்)

ஷேர்கான்: மிக நல்ல பாட்டு, குழந்தைகளே! சரி பாடியது

போதும். இனி நீங்கள் போய் விளையாடலாம்.

(குழந்தைகள் கலகலப்புடன் ஓடிச்செல்கின்றனர்.)