பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

69

நூர்ஜஹான்: நாடு உண்மையிலேயே மிக அழகு வாய்ந்த நாடுதான்.இயற்கை தன் முழுஎழிலையும் கொட்டிக் குவிக்கின்ற நறும்பொழில் இதுவே என்னலாம்!

ஷேர்: எழில் மட்டுமென்ன, மேஹர், செல்வங்களும் கூடத்தான். ஆனால் இந்நாட்டன்னை தன் மக்களுக்கு இத்தனை செல்வமளித்துச் செல்லங்கொடுத்து அவர்களைக் கெடுத்துவிடுகிறாள்.

நூர்: அப்படியல்ல, அன்பரே! எவரும் மட்டற்ற இன்பம் நுகர்வது இயற்கைக்குப் பொறுப்பதில்லை. இன்பத்தின் எல்லை துன்பத்தைக் கைகாட்டி அழைக்கிறது. அது கிடக்கட்டும். அதோ அண்ணா அஸஃவ் வேகமாக வருகிறார். ஏதோ அவசரச் செய்தியாகத்தானிருக்க வேண்டும்!

(அஸஃவ் வருகிறான்.)

ஷேர்: வா, அஸஃவ்! ஏன் இத்தனை விரைவு? என்ன செய்தி? அஸஃவ்: இளவரசன் சலீம் பேரரசனாகிவிட்டான், ஜெஹாங்கீர் என்ற விருதுப் பெயருடன்.

ஷேர்: அப்படியானால் அக்பர்...!

அஸ: அவர் காலமாகிவிட்டார்.

நூர் நடுநிலைப் புகழ் வாய்ந்த அரசியல் கதிரவன் மறைந்தான்!

அஸ: நிலவொளி வீசும் ஜெஹாங்கீர் ஆட்சி தொடங்கி விட்டது!

ஷேர்: அதற்குள் புத்தாட்சிக்கு இத்தகைய கவிதை பாடிவிட்டாயே. அது எத்தகைய ஒளி என்பது இனியல்லவா விளங்க வேண்டும்!

அஸ: தங்களுக்கு அது நிலவொளியாக இப்போதே வீசத் தொடங்கி விட்டது, ஷேர்! (மாறிய குரலில்) அத்தான், பட்டத்துக்கு வந்தவுடனே அவரது முதற் கட்டளைப் படி நீங்கள் ஐயாயிரம் குதிரைப்படை வீரருக்குத் தளபதி ஆக்கப்பட்டிருக் கிறார்கள்!