பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

நூர்: நாசமாய்ப் போச்சு!

அப்பாத்துரையம் - 23

அஸ: அத்துடன் உங்களை உடனடியாக ஆக்ரா அரண்மனைக்கு அழைத்தும் இருக்கிறார்.

ஷேர்: மகிழ்ச்சி! நான் உடனே புறப்பட விரும்புகிறேன். (நூர்ஜஹான் நோக்கி) நீ வரத் தயாராயிரு.

(ஷேர்கானும் அஸஃவ்வும் சிரித்துக் கொண்டு போகின்றனர்.)

நூர்: ஆ, என் நெஞ்சம் ஏன் கொந்தளிக்கிறது! என் கணவர் ஒப்பற்ற வீரர், தூய உள்ளம் படைத்தவர்; அவர் காதல் பெரிது; ஆனால் பெறுதற்குரிய அப்பேற்றை நான் எதிர்பார்க்கவுமில்லை; அவாவவுமில்லை. கடமை ஆற்றுகிறேன், முழுதும் கடமை ஆற்ற விரும்புகிறேன். அவ்வளவுதான்! ஆனால் என் கட்டுமீறிக் கோட்டை இடிகிறதே!

காட்சி 2

(ஆக்ரா அரண்மனை பேரரசி ரேவா தூய வெள்ளாடையுடன் வீற்றிருக்கிறாள். புதிய பேரரசன் ஜெஹாங்கீர் அமர்ந்து

உரையாடுகிறான்.)

ரேவா: உண்மையை ஒளியாது கூறும், அரசே! வங்காளத்திலிருக்கும் ஷேர்கானை உயர்த்தவும் அவசர அவசரமாக அழைக்கவும் காரணமென்ன?

ஜெஹாங்: உண்மையைத்தான் கூறுகிறேன், ரேவா! என் பொருளமைச்சர் ஆயஷின் மருமகனாயிற்றே அவன். அவன் வீரமும் புகழும் உனக்குக் கூடத் தெரியாதவையல்லவே!

ரேவா: அது சரி, அவன் மனைவியிடத்தில் உங்களுக்கு இப்போது...

ஜெஹாங்: உனக்கு ஏன் இத்தனை ஐயம், ரேவா? உனக்காக நான் என் உள்ளத்தை ஆழ்ந்து அலசிப் பார்த்துத் தான் கூறுகிறேன், அங்கே வேறு எந்தவகை எண்ணமும் இல்லை. மேலும் அவள் மற்றொருவன் மனைவி.

ரேவா: நானும் அதற்காகத்தான் இத்தனை கவலையும் அச்சமும் கொள்கிறேன், அரசே. இல்லையானால் என் இடத்தை