பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -1

71

இன்னொரு பெண் வந்து பங்குகொள்வதிலோ அல்லது முழுவதும் என் இடம் பெறுவதிலோகூட நான் அவ்வளவு அக்கறை காட்ட மாட்டேன். பேரரசின் புகழில் மாசு ஏற்படக் கூடாது என்றுதான் அஞ்சுகிறேன்.

ஜஹாங்: நீ என் கையில் காட்டும் அக்கறையும் பெருந் தன்மையும் என்னைப் பரவசப்படுத்துகின்றன. ஆனால் இதே அளவுக்கு உன் காதலின் பாசமும் நேசமும் இருந்தால்...

ரேவா: நான் தங்களுக்கு என்ன குறை வைத்திருக்கிறேன்,

அரசே?

ஜஹாங்: குறை எதுவும் வைக்கவில்லை. ஆனால் நிறைவுபடுத்தவும் இல்லை. உன் உள்ளத்தின் பாசம் நாடித்தானே நான் அன்று உன் தந்தையில்லம் வந்தேன். வந்து எளிதில் உன்னைப் பெறவும் செய்தேன். ஆனால் இன்னும் நான் உன் உள்ளத்தில் இடம்பெற முடியவில்லையே!

ரேவா: நான் எத்தனை தடவை விளக்கம் கூறுவது, அரசே! இந்துப் பெண்களாகிய எங்களுக்குக் கடமை உண்டு, கற்பு உண்டு; காதலுக்கு ஏது இடம்? இந்து முஸ்லீம் நேசத்தை நாடித்தானே என் தந்தை என்னைத் தங்களுக்கு அளித்தார்! அந்த மணம் இந்து முஸ்லீம் மணமாயிருக்கலாம்; உங்களுக்குக் காதல் மணமாயிருக் கலாம்.எனக்குக் கடமை மணம் மட்டுந்தானே! அக்கடமை வழியில் நான் காதல் குறுக்கிடாமல் தடுக்க முடியும். அதுவே எங்கள் கற்புநெறி. அது காதலை எப்படி உண்டு பண்ணமுடியும்? எங்கள் காதலைக் கேட்டா மணம் செய்கிறார்கள்?

ஜெஹாங்: அப்படியானால் எனக்கு நீ எப்போதும் ஒரு தெய்வமாக மட்டுமே இருக்கமுடியும் அல்லவா?

ரேவா: இல்லை, அரசே! தங்களுக்கு நான் மனமுவந்த பணியாள், அடிமை; உள்ளத்தில் கள்ளமில்லாத நண்பன்; கடமை தவறாத மனைவி. என் உடலுயிர் யாவும் உங்களுக்கே பலியிடவும் நான் தயங்கமாட்டேன்.

காட்சி 3

(ஆக்ரா நகர் நாற்சந்தி, நகரமாந்தர் நடமாட்டம். ஒருபுறம் வானர ராஜா, கராமத்கான்.)