பக்கம்:அப்பாத்துரையம் 23.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

அப்பாத்துரையம் - 23

வா-ரா: கராமந்கான்!

கரா: அரசே!

வா-ரா: பேரரசர் கூறியது நினைவிருக்கிறதா?

கரா: ஆம், அரசே!

வா-ரா: ஷேர்கான் இலேசுப்பட்ட பேர்வழியல்ல, நினைவிருக்கட்டும் ஏற்கனவே ஒரு முயற்சி தோற்றுவிக்கப் பட்டது. பூங்காவில் நம் ஏவலால் திறந்துவிடப்பட்ட சிங்கம் அவனைக் கொல்லவில்லை. அவன் பெயருக்கேற்ற படி அவனே சிங்கத்தைக் கொன்றான். காயப்பட்டாலும் அவன் தப்பி விட்டான்.

கரா: ஆனால் என் யானைக்கு அவன் தப்பமுடியாது.

வா-ரா: சரி, ஆள்வரும்போது அடையாளம் தவறாது பார்த்து, யானையைக் கிளறி இயற்கையாகக் கட்டுமீறியது போல் ஏவி அவனைத் தொலைத்துவிடு. வெளியே மெய்ப்புக்கு உனக்குச் சிறுதண்டனை தரப்படலாம். ஆனால் பேரரசர் தயவு முழுவடிவில்...

கரா: இதற்குமேல் சொல்லவேண்டாம், எசமான்! எல்லாம் நான் சரிவரச் செய்துவிடுவேன். போய்வருகிறேன்.

(போகிறான்.)

காட்சி 4

(ஷேர்கான் மாளிகை மேல்மாடி. நூர்ஜஹானும் ஒரு தோழியும் அமர்ந்து உரையாடுகின்றனர்.)

நூர் : தோழி,நீ ஒருத்திதான் எனக்கு ஆறுதல் கூறத்தக்க வளாயிருக்கிறாய். நான் என் நிலையை இதுவரை வேறு யாரிடமும் கூறவில்லை. உன்னிடம் மட்டும் கூறுகிறேன், நீ எனக்குத் தக்க நல்லுரை கூறி வழிகாட்டுவாய் என்ற நம்பிக்கையுடன்.

தோழி: தங்கள் நம்பிக்கை வீண்போகாது. என்னாலியன்ற வரை தங்கள் துயர்களைய முயல்கிறேன்.