பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

87

ராந்தேன் படகை நோக்கிச் சென்றான். குளூபின் பணத்துடன் வேறு திசையில் திரும்பினான்.

டியூராண்டின் முடிவு

தமோலிபாஸ் கப்பல் புறப்பட்டுச் சென்ற நாளைக்கு மறுநாள் டியூராண்டு கெர்ஸ்னியை நோக்கிப் புறப்பட்டது.

இத்தடவை குளூபின் கப்பலுக்குச் சரக்குகள் ஏற்றுவதைக் கவனிக்க வேயில்லை. ஜீன் ஆபர்ஜில் அவன் இல்லாததால் சரக்குகள் ஏற்றப்படாமலே போயின.

கப்பலில் மீகாமனுக்கடுத்த தலைமைப் பணியாள் தங்க்ரூவில் என்பவன். அவன் கெர்ஸ்னியிலேயே பிறந்தவன். நல்ல உயர்குடியைச் சேர்ந்தவன். கப்பலின் முழுப்பொறுப்பும் அவனுடையதாதலால் கப்பலை விட்டு அவன் வெளியே செல்வதேயில்லை. அவனுக்கென்று பிறரறியாத ஒரு தனியறை இருந்தது. முழு ஓய்வு கிடைத்தபோது அவன் யாருமறியாமல் அங்கே சென்று தூங்குவான். குடிவகை கிடைத்தபோது அவ்விடத்திலேயே சிறிது குடியாறுதல் அவனுக்கு வழக்கம். ஆனால் இந்த ஒரு குற்றத்தை அவன் யாரும் அறியாமல் மறைத்து வைத்திருந்தான்.

கப்பல் புறப்படுமுன் தங்க்ரூவில் சிறிது ஓய்வு கொள்ளத்தன் அறை சென்றபோது, அங்கே ஒரு குடிவகைப் புட்டி இருந்தது கண்டான். அங்கே யார் வைத்திருப்பார்கள் என்று சிந்தித்தான். யார் வைத்தாலென்ன, ஒளித்து வைத்ததை ஒளித்தே குடிக்கலாம் என்று அவன் நினைத்தான்.

மறுநாள் கப்பலை அவன் சரியாக ஓட்டமுடியவில்லை. ஆனால் இது தெரியவிடாமல் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டினான்.

நாள்பட்ட தேர்ச்சியுடைய கப்பலோட்டிகள் எச்சரித்தனர், அன்று கடல் கொந்தளிப்பும் மூடுபனி மறைப்பும் உடைய தாயிருக்குமென்று. ஆனால் மீகாமன் புறப்படவே துணிந்து

கட்டளையிட்டான்.