பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

115

வேளை உள்ளே போவதும் வெளியே வருவதும் மட்டும் கடவுள் விருப்பமாயிருக் கலாம். மன்னன் ஆணையாயிருக்கலாம். உள்ளே போனபின் கடவுள் கண்களுக்கும் மன்னன் கண்களுக்கும் திரையிடப்படும்.

ஸ்வீடனின் மன்னன் முதலாம் ஆஸ்கார் காலத்தில் ளைஞனா யிருந்த ஒருவன் ஒரு மனிதனைக் கொன்றுவிட்ட காரணத்துக்காக உயிருடன் இவ்வுலகிலிருந்து சிறை உலகுக்கு அனுப்பப்பட்டிருந்தான். அவன் அன்று தூக்கிடப்பட்டிருந்தால் அவன் கதை அத்துடன் முடிந் திருக்கும். நம் கதையும் இத்துடன் நின்றிருக்கும். ஆனால் இந்த உலகத்தின் வாழ்வை முடித்துச் சிறையுலகத்தில் இன்னொரு வாழ்வை வாழ அவன் அனுப்பப்பட்டிருந்தான். அவனுடைய இரண்டாவது உலக வாழ்வின் வரலாற்றையே நாம் இங்கே குறிக்கிறோம்.

இந்த உலகில் புதிதாகப் பிறந்த உயிருக்கு நாம் நம்மிடையே அவனை அடையாளந் தெரியும்படி ஒரு பெயரிட்டழைக்கிறோம். அவனுடைய குணங்குறைகளுக்கேற்ப அவனை மதித்து நடத்துகிறோம். பெயரையோ அவன் மதிப்புத் தரத்தையோ அவன் முதுகில் எழுதி ஒட்டுவதில்லை. ஆனால் இது இந்த உலக நீதி. சிறை உலக நீதி வேறு. நம் இளைஞனுக்குச் சிறை உடை என்ற ஒரு தனி உடை தரப்பட்டது. அதில் பின்புறம் அழகாக வாழ்க்கைக் கைதி என்ற குறிப்புத் தெரியும்படியாக வா கை. என்ற எழுத்துக்கள் அழகிய கறுப்பு வண்ணத்தில் தீட்டித் தைக்கப்பட்டிருந்தன. இது அவன் மதிப்புத்தரம் அல்லது சிறை வகுப்பைக் குறித்தது. அதனடியில் அவனுக்கே உரிய குறியீடு அல்லது பெயராக 65 என்ற எண்ணும் தரப்பட்டிருந்தது.

வாகை. என்ற வகுப்பு சிறையின் வகுப்பு. உயர்வு தாழ்வு முறைப்படி கை என்ற வகுப்பை விட உயர்ந்தது. ஆனால் வெளி உலகில் வகுப்பின் உயர்வு வாழ்வின் இன்ப வாய்ப்புக்களின் உயர்வுக்கு அறிகுறி. இங்கே அவ் உயர்வு, துன்ப வாய்ப்புக்களின் உயர்வுக்கு அறிகுறி. பொதுக் கைதிகள் சிலந்திச் சிறைக்கூடத்தின் விருந்தினர் உரிமைமட்டுமே தரப்பட்டவர்கள். வாழ்க்கைக் கைதிகள் அதன் நிலையான குடிகள்.

உணவை எதிர்பார்த்து வாகை. 64 வாழவில்லை. தரப்பட்டால்,தரப்பட்டபோது, தரப்பட்டதை அவன் உண்டாக