(134
அப்பாத்துரையம் - 24
சாவு கோர நடனம் ஆடிற்று. ஆனால் அதனிடையே புதுவாழ்வு மலர்ந்து புன்னகை பூத்தது.
3. கானாறு
மங்கிய நீலநிறமுடைய மலைகள் ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டு நின்றன. இடையே கானாறு ஊடறுத்துக் கொண்டு சென்றது.
கானாறு நிலத்தை வளப்படுத்தவில்லை. ஆனால் மக்கள் வாழ்வுக்கு அது வளந்தர முடிந்தது. அதில் மீன்கள் ஏராளம். மீன்பிடிக்கும் உரிமைக்காக இருபுறமும் மலையடிவாரங் களிலுள்ள சிற்றூர்கள் போட்டியிட்டன. மலைகளின் தோற்றத்திலிருந்த போட்டியை இது மெய்யான போட்டி ஆக்கிற்று.
ஆற்றின் நடுவே இருந்த பாறை ஒன்று இரண்டு ஊர்களின் மீன்பிடி உரிமைகளுக்கிடையே வழிவழி மரபாக ஒரு எல்லைக் கல்லாகக் கருதப் பட்டிருந்தது. ஆனால் இந்த எல்லைக்கல்கூட அவ்வூர்களினிடையே நட்பை வளர்க்கவில்லை. ஆற்றின் நீரோட்டம் அப்பாறையால் தடைபட்டு, அதன் கீழே ஒரு நீர்த்தேக்கம் ஏற்பட்டிருந்தது. அதில் மீன்கள் இளைப்பாறின. மக்களும் அவற்றை அங்கே ஏராளமாக வலைபோட்டுப் பிடிக்க முடிந்தது. ஆனால் வடபுற அருகு செவ்வாகவும் தென்புறம் வளைந்து மிருந்ததால், தென்புறத்திலேயே மிகுதி மீன் அகப்பட்டது. இதனால் வடபுறத்தாரிடையே பொறாமையும் புழுக்கமும் ஏமாற்றமும் வளர்ந்து வந்தன.
பிடித்த மீனில் ஊர்த்தலைவனுக்குப் பாதி மகமை யுரிமை இருந்தது. தென்மலையூரில் தலைவர் ஜக்ரிஸ் என்பவன். வடமலைத் தலைவன் கெர்ஸ்டாப். பாறையின் இந்த ஒருதலை நீதியால் ஜக்ரிஸின் செல்வ வளம் பெருகிற்று. மலைவட்டத்தின் நாட்டாண்மைக் கழகம் வரை அவன் செல்வாக்கு வளர்ந்தது. ஆனால் இந்தச் செல்வாக்கே எதிரிக்கு ஒரு புதிய வகையில் உதவிற்று. பொறித்துறை வல்லான் ஒருவன் ஜக்ரிஸின் எதிரி யானான். அவன் அறிவுரை கேட்டு கெர்ஸ்டாப் பாறையின் ஓரத்தில் ஒரு சக்கரப் பொறியை அமைத்தான். அது வடபுறமுள்ள நீரோட்டத்தின் வேகத்தைக் குறைத்தது. தென்புறமுள்ள