பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

145

தேர்தல் நாள் குறிக்கப்பட்டிருந்தது. பனியையும் பாராட்டாமல் ஜக்ரிஸ், ஆற்றைப் படகில் தாண்டிவந்து எதிரியின் ஊரெங்கும் தேர்தல் பிரசாரம் செய்திருந்தான்.

மாலையாயிற்று. வானங் கறுத்தது. மலையின் சாம்பல் நீலம் பனிப்புகையுள் மூழ்கிற்று. பனிப்புயலும் பனிமழையும் பெய்தன. ஆற்றில் வெள்ளம் ஒருபுறம் புரண்டது. பனிக்கட்டிகள், பனிப்பாளங்கள் வேறு மிதந்துவந்தன. நீர்ப்பரப்பு பல இடங்களில் திடுமெனப் பனி நிலமாயிற்று. அதேசமயம் நீரோட்டத்தால் பனித்தளம் நொறுங்கிற்று. பனிக்கட்டிகள் ஒன்றுடனொன்று மோதி உடைந்தன. சுழலிலகப்பட்டும் நெக்குண்டும் பனிப்பாளங்கள் வளைந்து நெளிந்து சுருண்டன. பனி நொறுங்கும் இரைச்சலும் பனி ஊதைக்காற்றின் ஊளையும் காதுகளைத் துளைத்தன.

முன் பகலில் ஆறுகடந்து வந்த ஜக்ரிஸ், மாலையில் ஆறு கடந்து வீடுசெல்ல முடியவில்லை. கடந்தால் கட்டாயம் சாவுதான் என்று படகோட்டிகள் ஜக்ரிஸை அச்சுறுத்தினர். ஜக்ரிஸ் செய்வது இன்னது என்று தெரியாமல் விழித்தான்.எதிர் திசையில் புயலையும் சட்டைபண்ணாமல் இம்பார் தந்தைக்காகக் கவலையுடன் வந்து காத்திருந்தாள். புயலில் கடந்து வரவேண்டாம் வரவேண்டாம் என்று அவள் துடிதுடிப்புடன் கைமறித்துக் காட்டியது பனிப்புகையிடையே கூடத் தெரிந்தது. வரவில்லை என்று கூறி அவனும் கையசைத்தான்.

ஆனால் இக்கரை முற்றும் எதிரியின் இடம். என்ன செய்வது?

ஓலா சிறிது தொலைவில் மரம் அறுத்துக்கொண்டே இத்தனையையும் கவனித்துக்கொண்டிருந்தான்.

ஜக்ரிஸ் கரையோரமாக நடந்துவந்தான். ஓலா மரமறுத்துக் கொண்டிருக்கு மிடத்திற்கு வந்ததும், தன்னையறியாமலே நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.சிறிது நேரம் நின்றபின் அவனாகவே பேச்சுக் கொடுத்தான்.

"மரம் அறுப்பதில் என்ன இவ்வளவு ஈடுபாடு?"

“ஆற்றையொட்டி வாழ்க்கை நடத்துபவன். படகுக்கான வேலைகளில் கருத்துச் செலுத்தாமலிருக்க முடியுமா?