பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

அப்பாத்துரையம் - 24

இருவரும் பேசும் நிலைக்கு வந்துவிட்டனர். பேச்சு இப்போது கருத்துக்களின் பரிமாற்றமாயிற்று.

“பத்திரிகைகளில் இப்படி ஏன் எழுதினாள், ஓலா!” “பத்திரிகையிலேயே விளக்கமும் கொடுத்திருக்கிறேனே!” “பத்திரிகையிலேயே விளக்கமா!”

66

“ஆம்”

ஜக்ரிஸ் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டான். எதிர்கரையில் நின்றிருந்த இம்பார் இருவரையும் இமையாது நின்று பார்ப்பதை அவன் கவனித்தான்.

“படகோட்டுவதிலும் நீ வல்லவன்தானே!”

66

“ஓரளவு. ஏன்!”

66

'ஒன்றுமில்லை. இந்நேரம் ஆற்றைக் காணவே அச்சமாயிருக்கிறது.படகோட்டிகள் எவரும் ஆற்றைக் கடக்கத்

துணியவில்லை.

ஜக்ரிஸ் கருத்து என்ன என்று ஓலாவால் உணர முடியவில்லை. ஆனால் அவன் திரும்பிப் போக வகையற்ற வனாயிருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்தான்.

66

'ஆம், இன்று நீங்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாது. என் வீட்டுக்கு வந்து ரவு தங்குவதுதானே! இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி உங்களை விருந்தினராக அழைக்கிறேன்” என்றான் ஓலா.

ஜக்ரிஸ் அதை ஏற்க விரும்பவில்லை. வேண்டாம் என்று தலையசைத்து மறுத்துவிட்டான்.

பின்னும் சிறிது நேரம் இருவரும் வாளா இருந்தனர்.

மீண்டும் ஜக்ரிஸே பேச்செடுத்தான்.

66

இன்று சனிக்கிழமை என்று நினைக்கிறேன்!” என்றான். ஓலாவின் நாடி நரம்புகளில் மின்வேகம் பாய்ந்தது.

66

அதற்கென்ன?" என்றான், உள்ளக் கருத்துக்களை மறைத்துக் கொண்டு.