பிறமொழி இலக்கிய விருந்து -2
147
"ஒன்றுமில்லை, அதோ அக்கரையில் 'இம்பார்' நிற்பதைப் பார். அவள் வகையில் நீ விடாப்பிடியாய் இருக்கிறாய். நான் அவள் தந்தை. அவள் வாழ்க்கையை நான் ஒரு வகையாக வகுத்தாகவேண்டும். அத்துடன் என்ப பழைய பகைமையையும் நான் மறந்துவிடவில்லை. அதற்கும் ஒரு வகையான முடிவு காணவேண்டும். இரண்டுக்கும் பொதுவாகச் செல்கிறேன்- ஆற்று நீரில் இப்போது காலன் வலைவிரித்திருக்கிறான். நீ துணிச்சல்காரன். உயிருக்கு அஞ்சாதவன். இன்று நீ ஆற்றைக் கடந்துசென்று அவளை அடைய முடியுமானால், நான் இனி உனக்குக் குறுக்கே வந்து தடுக்க மாட்டேன்.”
ஓலா இப்போது சிந்தனையிலாழ்ந்தான். அவனுக்கு அவன் புதிய நட்பில் ஐயம் தட்டுப்பட்டது. ஆனால் நம்பிக்கை மீண்டும் நகரத் தொடங்கிற்று.
"இது உண்மைதானா?”
“ஏன் ஐயப்படுகிறாய்? நான்தான் என் கருத்து முழுவதையும் கூறிவிட்டேனே! நீ உயிருடன் கடந்து செல்ல முடியாது என்றுதான் நினைக்கிறேன். நீ துணிந்துசென்று கரையேறாவிட்டாலும் என் பகைமை தீரும், சேர்ந்தாலும் இன்னொருவகையில் பகைமை தீரும்.”
அவன் ஐயம் இன்னும் முற்றிலும் மாறவில்லை.
"நான் மாண்டால் என்ன நேரும் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இம்பாருக்காக இதுவரை எத்தனை இன்னல்களைத் தாங்கியிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனால் கரையேறிய பிறகு நீங்கள் இந்தச் சொல்லிலிருந்து மாறிவிட்டால்.."
66
இதுவரை நானும் என் மக்களும் தலையிட்டதே மலைநாட்டு வழக்கத்திற்கு மாறானது, தவறானது. இனி அதே தவறுதலை நானும் செய்யமாட்டேன்.யாரையும் செய்ய விடவும் மாட்டேன். இது உறுதி. ஆனல் ஒன்று நினைவிருக்கட்டும். நான் இப்போதும் பகைவன்தான்- வஞ்சகமற்ற பகைவன். உன்னை இடருக்கு ஆளாக்கவேண்டும் என்று தான்- சாவிற்குள் தள்ளிவிட வேண்டுமென்றுதான் கூறுகிறேன். ஆகவே ஏமாறவேண்டாம்.