164
அப்பாத்துரையம் - 24
படுமட்டி. இத்தகையவனிடம் கடிகாரம் போய்ச் சேரப்போவது எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை.
நல்லகாலமாக ஃரிஸான்ஃவ் ஊரிலில்லை. அவன் வந்து அதைப் பெறுமுன் அதை அத்தையிடமிருந்து தட்டிப் பறித்துவிடுவதென்று நான் முடிவு செய்தேன். டேவிடிடம் கூடக் கலக்காமல் இதில் துணிந்து திட்டமிடவும் தீர்மானித்தேன். பகலில் அதை அத்தையிடமிருந்து பெறுவது முடியாத காரியம். ஆகவே இரவில் அவள் அதை எங்கே வைத்திருந்தாலும் திருடன்போலச் சென்று கைப்பற்றிவிடவேண்டும் என்பது என் திட்டம்.
அத்தை அறைக்கதவு எப்போதும் தாழிடப்படாமலே இருக்கும். அதை மெதுவாகத் திறந்து, கதவு திறக்கும் ஓசையோ, நடக்கும் காலடியோசையோ கேட்டு யாரேனும் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்துடன் மெல்ல மெல்ல நடந்தேன். நடுவிலே ஒரு நாற்காலி இடறிவிழுந்து என்னைக் காட்டிக் கொடுக்க இருந்தது- காட்டிக் கொடுத்துவிட்டது என்றே நினைத்தேன். நல்லவேளை! யாரும் எழுந்துவிடவில்லை.
விளக்கு மங்கி மங்கி எரிந்துகொண்டிருந்தது. அதன் நிழல்கள் ஆட்கள்போல் நடமாடின. அவை நிழல்கள் தான், ஆளல்ல என்று படிப்படியாகத் தேறினேன். ஆனால் நான் தேடிப்பிடிக்க எண்ணிய கடிகாரம் என் கண்முன்னே சுவரில் ஒரு ஆணியில் தொங்கிக்கொண்டிருந்தது. இது என்னை ஊக்கிற்று. அத்தை படுக்கையில் புரண்டாள். நான் அவளைத் தாண்டிச் சென்றேன். கைக்கடிகாரம் என்கையில் சிக்கியது. சிறிதும் தாங்காமல் நேரே ஒரே ஓட்டமாக நான் ஓடிவந்து விட்டேன்.
வழியில் யாரும் என்னைப் பார்த்ததாகத் தெரியவில்லை. டேவிட் கூடத் தூங்கிக்கொண்டிருந்தான்.நான் அவனைத் தட்டி எழுப்பிக் கடிகாரத்தைக் காட்டினேன். அவன் கருத்து அறிந்து, இணக்கம் பெற எனக்கு அவ்வளவு துடிப்பாயிருந்தது.
கண்களைத் துடைத்துக்கொண்டு டேவிட் கடிகாரத்தைப் பார்த்தான். முதல் தடவையாக அவன் என்னை வாய்விட்டுப் பாராட்டினான். “அலக்ஸி, இந்தத் தடவை உன் கெட்டிக் காரத்தனத்தை நான் மெச்சத்தான் வேண்டும். இனி அடுத்த